பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எத்தனை ஆயிரமாலுைம் அவற்றை அப்படியே பெட்டியில் வைப்பதைத்தான் விரும்புவார். பெட்டியைப் பூட்டும் சிரமம் கூட எடுத்துக் கொள்ள மாட்டார். அப்படி ஒரு இயல்பு கவிஞரிடம். 29 திருமணத்துக்கு வர வேண்டாம் கவிஞரின் மூத்த மகள் சரசுவதிக்குத் திருமணம் நிச்சயிக்கப் பெற்றது. அழைப்பு அச்சிடப் பெற்று எல்லோருக்கும் அனுப்பப் பெற்றது. - கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கு திருமண அழைப்போடு ஒரு கடிதம் எழுதி அனுப்பினர் கவிஞர். - 'தங்களுக்கு ஒய்வு இருக்கிறது என்று திருமண விழாவுக்கு வந்து விட வேண்டாம்' எனக் குறிப்பிட்டி ருந்தார் கவிஞர். திருமண விழாவுக்கு அனைவரையும் வர வேண்டும்' என்று அழைப்பதுதான் வழக்கம். கவிஞரோ வர வேண்டாம் என்கிருரே என்று எண்ணி வியப்படைந்தேன். கவிஞரிடமே 'ஏன் அப்படி எழுதினர்கள்?' என்று கேட்டேன். "திருமணம் நடைபெறுவது கிராமம் (சிற்றுார்). என்.எஸ்.கே. படப்பிடிப்பு இல்லாமல் இருந்தால், திருமண விழாவுக்கு வந்து விடுவார்; அங்கே பெருங்கூட்டம் கூடி விடும். சமாளிக்க இயலாது; அதல்ை அவ்வாறு வர வேண்டாம் என எழுதினேன்' என்ருர் கவிஞர்.