பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 .உண்மையை மிகவும் எதிர்பார்ப்பார். ஆரவாரம் செய் பவர்களையும், பொய் பேசுபவர்களேயும் அவர் அறவே வெறுப்பார். மேடையிலும், தனிப்பட்டவர்களிடமும் பேசும் பொழுது, தமக்குச் சரி எனத் தோன்றுவதை, ஒளிவு மறைவு இல்லாமல் உறுதியாக-உரமாகப் பேசும் வல்லமை உடையவர். குழந்தை உள்ளம் கிரம்பியவர்; யாரிடம் பேசினலும் மிகுந்த உரிமையோடு பேசுவார். ஆண்-பெண் இரு .பாலாரிடத்தும் மிகவும் கலகலப்பாகவும் வாஞ்சையோடும் பேசக் கூடியவர். அழகான பொருள்களையும், இயற்கைக் காட்சிகளை யும் ஆவலோடு பார்த்து ரசிப்பார்; மகிழ்ச்சி அடைவார். நல்ல உடை உடுத்திக் கொள்வதில் பிரியம் உடை யவர். இப்பா அணிந்து கொள்வார்; ஷெர்வானி என்னும் ண்ேட அங்கியைப் போட்டுக்கொண்டு அவர் பவனி வந்தால் அது கண்கொள்ளாக் காட்சியாகும். உல்லன் அல்லது பட்டுச் சால்வை போர்த்துக்கொண்டே அவர் வெளியே புறப்படுவார் ஒரு முறை பாவேந்தர் அணிந்திருந்த ஷெர்வானி' மீது நான் ஆசைப்பட்டேன்; உடனே கடைக்கு என்னேக் கூட்டிக்கொண்டு போய் பழுப்பு நிறத்தில் துணி எடுத்து, தெரிந்த தையற்காரரிடம் கொடுத்து தயாரிக்கும்படி கூறினர்; பிறகு என்னை அணிந்து கொள்ளச் சொல்லி அதைப் பார்த்து மகிழ்ந்தார். அந்த கினேவு இன்றும்கூட என் உள்ளத்தில் பசுமையாகப் பதிந்துள்ளது. சோர்வு என்பதே கவிஞரிடம் இல்லை; நாளே என் பதும் இல்லை; எதையும் அப்பொழுதே நிறைவேற்ற