பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங் கூத்து

இரவு நேரம், காதலன் தன் காதலியைக் கண்டு அளவளாவுவதவற்காக வத்து மறைவிலே நிற்கிருன். அவன் இரவிலே வரும்போதெல்லாம் குறிப்பாகத் தான் வந்திருப்பதைப் புலப்படுத்துவான். அங்கே உள்ள பொய் கையிலே ஒரு கல்லை எடுத்து எறிவான். அது துடும் என்ற ஒலியை உண்டாக்கும். தோழி போய்ப் பார்த்து வந்து தலைவியை அழைத்துக் கொண்டு போவாள்.

முதல் நாள் தலைவன் வந்து அப்படி ஒலியை உண்டாக் கினன். அவனைத் தலைவி போய்ச் சந்திக்கவில்லை தோழி அழைத்துச் செல்லவில்லை. அவளுக்கு, எப்படியாவது அந்த ஆடவன், தலைவியை ஊரார் அறியத் திருமணம் செய்துகொண்டு வாழவேண்டுமென்று ஆசை. அவன் நினைத்தபடியே ஒவ்வொரு நாளும் தன் காதலியைக் கண்டு இன்புற்று ல், திருமணத்தைப் பற்றி நினைக்கவே மாட்டான். தலைவியைச் சந்திப்பதற்கு இடையூறு நேர்ந் தால் அவன் சிந்திப்பான் திருமணம் செய்துகொண்டால், யாருக்கும் அஞ்சாமல் தன் காதலியுடன் பிரிவின்றி இணைந்து வாழலாம் என்ற உண்மை புலனாகும்.

அதனால் தோழி முதல் நாள் அவர்களைச் சந்திக்கும் படி செய்யவில்லை. இன்றும் அப்படிச் செய்ய அவளுக்கு மனம் இல்லை, ஆளுல், திருமணம் செய்து கொள்ளவேண் டும் என்ற கருத்தை அவனிடம் உண்டாக்கவேண்டும் என்று விரும்பிளுள். அதோடு முதல் நாள் அவனைச் சந் திக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம் கூறவேண் டுமே உண்மையைச் சொல்ல முடியுமா? ஒரு திகழ்ச்சி யைக் கற்பனை செய்து தலைவியிடம் கூறுபவளைப் போன்று மறைவில் நின்ற தலைவன் கேட்கும்படியாகச் சொல்ல லாளுள்.