பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பிடியும் களிறும்

முறுவல் பூத்து, காபாலக் கூத்தைக் கண்டு அதற்குத் தாளம் கொட்டுகிருள்.

நவ்வந்துவனர் இறைவனை நோக்கிப் பேசுகிருர்: 'இற்ைவா, கொலையுழுவைத் தோலே இடையிலே கட்டிக் கொன்றைத்தார் கழுத்திலே புரளத் தலையோட்டைக் கையிலே கொண்டு நீ காபாலக் கூத்தை ஆடும்போது, முல்லேபோன்ற முறுவலையுடைய உமாதேவி தாளம் போடுவாளோ? வேறு யார் அப்போது உனக்குத் துணை நின்று அப்படிச் செய்ய முடியும்?”

கொலை உழுவைத் தோல் அசைஇக்

கொன்றைத் தார் சுவற்புரளத்

தலை அங்கை கொண்டு நீ

காபாலம் ஆடுங்கால்

முலே அணிந்த முறுவலாள்

முற்பாணி தருவாளோ?

(கொலை செய்ய வந்த புலியின் தோலை இடையிலே கட்டி, கொன்றைமாலை கழுத்திலே புரண்டு அசைய, பிரம னுடைய தலையோட்டை உள்ளங்கையிலே ஏந்திக் கொண்டு, நீ காபாலம் என்னும் கூத்தை ஆடுகையில், முல்லை அரும்பைப்போன்ற புன்னகையைப் பூக்கும் உமா தேவி, தாளத்தின் முதற்பகுதியாகிய பாணியைத் தரு sufrGertr?

உழுவை - புலி. அசைஇ - கட்டி. தார் -மாலை, சுவல்பிடரி, பின் கழுத்து. அங்கை - அகங்கை. முலை -முல்லை; கொலை, தலை என்ற சொற்களுக்கு எதுகையாக அமையும் பொருட்டு நடுவெழுத்துக் குறைந்தது; இதை இடைக் குறையென்று இலக்கணக்காரர் சொல்வர். அணிந்த - போன்ற, முறுவலாள் - புன்சிரிப்பைச் செய்பவள். பாணி . தாளத்தின் முற்பகுதி.)