பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 45

தலால் புண்ணியம் மிகுதியாகும். அந்தப் புண்ணியத் தாலே நமக்கு மேலும் மேலும் நன்மை உண்டாகும்.

தலைவி: அறன் எய்தல் அரிது; அதனினும் அரிது அருளி யோர்க்கு அளித்தல். இது இப்போது எனக்கு நன்ருக விளங்குகிறது.

தலைவன்: அவ்வாறு செய்த அறத்தின் பயன் நமக்குப் பல துறையிலும் நம்மை அறியாமலே வந்து கை கொடுக்கும். ஆதலின் அந்தப் புன்னியச் செயல்ை நாம் செய்வது தலைமையான கடமை. அதற்கு உதவி யாக இருப்பது ஒன்று உண்டு.

தலைவி. நல்ல உள்ளத்தைத்தானே சொல்கிறீர்கள்?

தலைவன்: நல்ல உள்ளம் வேண்டுவது அவசியந்தான். உள்ளம் மட்டும் இருந்தால் போதுமா? வெறுங்கை முழம் போடாது. இல்வாழ்க்கை நடத்துகிறவனுக்கு அறிவு, ஆற்றல் எல்லாம் இருப்பது நவ்ல முறையில் முயற்சி செய்து பொருள் சட்டுவதற்காகத்தான். பொருளை ஈட்டினல் அருளியோர்க்கு அளித்துப் புண்ணியத்தை ஈட்டிக் கொள்ளலாம். அந்தப் புண்ணி யம் மீட்டும் பொருள் ஈட்டும்போது துணையாக நின்று எளிதிலே பொருளை ஆக்குவிக்கும்.

தலைவி: அருள் வழங்கும் ஞானியருடைய அருளைப் பெறச்

செய்வது பொருள் என்று சொல்கிறீர்கள்.

தலைவன்: ஆம். அது மாத்திரம் அன்று. இல்வாழ்வா னுக்கு வாழ்க்கையில் பல இடையூறுகள்வரும். மழை, வெயில், பனி முதலியவற்ருல் வாழ்க்கைக்குத் துன்பம் நேரும்; விலங்கினலும், மக்களாலும் நேரும்; நோயாலும் துயராலும் நேரும். இவற்றை