பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பிடியும் களிறும்

உண்டு, புரு தன் சிறகால் வீசும்போது அந்தக் காற்றுத் தனக்கும் சிறிது வீசும்; அதற்கும் சிறிது நன்மை உண்டு. ஆனல் ஆண்மான் வெயில் முழுவதை யும் தான் தாங்கித் தனக்குச் சிறிதும் நன்மையின்றிப் பிணைக்கு நிழல் தந்து நிற்பது எத்தனை சிறந்த தியாகம்! அன்பின் உறுதியை என்னவென்று சொல்வது!

தலைவன் தன் காதலிக்குப் பொருளின் அவசியத் தைப் பற்றி வற்புறுத்திச் சொல்லிவிட்டதாக எண்ணி ஆறுதல் பெற்ருன். அப்பால் பொருள் ஈட்டும்பொருட்டு வேற்று நாடு செல்ல ஏற்பாடு செய்தான். குறிப்பாகத் தன் பிரிவைப் புலப்படுத்தினன். இன்ன காலத்தில் வரு வேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

தலைவன் பிரிந்து சென்றதல்ை தலைவிக்குத் துயரம் உண்டாயிற்று. ஆனல் பொருள் தேடச் செல்வது ஆடவன் கடமை என்பதையும், பொருளினால்தான் அறமும் இன்பமும் சிறக்கும் என்பதையும் அவள் தெரிந் தவள் அல்லவா? ஆதலின் அவன் வரும் வரைக்கும் துயரம் தோன்றிலுைம் பொறுத்திருப்பதே தன் கடமை என்று உறுதி பூண்டாள். ஆனல் அவளிடம் முன்பு இருந்த விளக்கம் இல்லை. தலைவன் அருகில் இருந்தபோது அவள் உடம்பில் இருந்த பொலிவு இப்போது இருக்க முடியுமா? உணவையும் அலங்காரத்தையும் குறைத்துக் கொண்டாள்.

அவளுடைய செயல்களைக் கண்டபொழுது தோழிக் குக் கவலை உண்டாயிற்று. 'தலைவர் இன்னும் வரவில்லையே என்ற கவலே இவளுக்கு அதிகமாகிவிட்டது. அதனல் இப்படி மெலிந்து வருகிருள், இவளுக்கு எப்படி ஆறுதல்