பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 61

பிரிவுஎண்ணிப் பொருள்வயிற் சென்றரும் காதலர்

வருவர்கொல்; வயங்கிழாஅய்!

வலிப்பல்யான்; கேள்இனி:

(கிடைப்பதற்கரிய அறத்தை மேற்கொண்டு, அருள் செய்து வந்தோராகிய துறவிகளையும் பிறரையும் உப சரித்து அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்குதலையும், பெரியதாகிய பகையை வென்று அப்படி வென்ற வலிமை யாலே தம்மை வழிபடாத மக்களை அழித்தலையும், விரும்பு தல் பொருந்திய காதலால் ஒன்றுபடும் இன்பத்தையும் பொருளானது தரும் என்று முன்னலே சொல்வி, அதன் பொருட்டுப் பிரியும் பிரிவை நினைந்து, அதற்காகச் சென்ற நம் காதலர் வருவாரென்றே தோன்றுகிறது; விளங்கும் அணிகளை அணிந்த தோழி, வருவாரென்றே துணிகிறேன். அதற்குரிய காரணங்களை இப்போது கேட்பாயாக.

எய்தி-மேற்கொண்டு. அருளியோர்-அருள் செய் தோர், பேணுர்-உறவு கொள்ளாதோர். தெறுதல்-அழித் தல், அடக்குதல் புரிவு-விருப்பம், வருவர்கொல்: கொல் என்பது அசைநிலை. வயங்கு இழை-விளங்கும் ஆபர ணத்தை அணிந்தவள்; இது விளியாகி வயங்கிழாஅய் என வந்தது வலிப்பல்-துணிவேன். இனி-இப்பொழுது.)

தோழி : என்ன காரணம்?

காரணங்கள் இன்னவென்று கூற வருகிருள் தலைவி. முன்பு தலைவன் பாலைநிலத்தின் கொடுமையைக் கூறிய தோடு அங்கே நிகழும். அன்பு நிகழ்ச்சிகளையும் சொன்னன் அல்லவா? அவற்றை இப்போது நினைத்துப் பார்க்கிருள்.

தலைவி : பாலே நிலம் அடி பொறுக்க முடியாத அளவுக்கு நெருப்பைப் போன்ற வெப்பம் உடையதாக இருக்