உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பிடி

ரிடம் செல்வாக்குப் பெற்று, தமது மார்க்கத்துக்கு மதிப்புத் தேட எண்ணினர். அரசாங்க மதம் என்ற அந்தஸ்து கிடைக்பதற்காக அரும்பாடுபட்டனர். இந்த முயற்சியில், போட்டியில், ஓரோர் சமயம், சைவரும், பிறிதோர் சமயம் வைணவரும் வெற்றி பெறுவர்—அதற்கேற்றபடி சைவத்துக்கோ, வைணவத்துக்கோ, ஆதிக்கம் கிடைக்கும். அரசபலம் பெற்று அந்த மதம் ஓங்கும்.

இந்தப் ‘போட்டிக்கு’ப் பல்லவநாடு, வளமான இடமாக அமைந்தது. ஒரு அரசர், வைணவத்தை ஆதரிப்பார்—அவர் காலத்தில் எங்கும் வைணவக் கோயில்கள் எழிலுடன் கிளம்பும்! விழாக்கள், வைணவத்தின் சார்பில் நடைபெறும். மற்றொருவர், சைவத்தை ஆதரிப்பார் —அவர் காலத்திலே சைவக் கோயில்கள் கட்டப்படும்; இம்முறையில், இரு மார்க்கங்களும் தழைத்தன.

நரசிம்மப் பல்லவன், வைணவ மதத்தை ஆதரித்தான்—அவனுடைய தகப்பனோ, சைவன். மன்னன் மகேந்திரன் காலத்திலே; மகேஸ்வரனுக்குக் கோயில்கள் கட்டப்பட்டு, மானியங்கள் அளிக்கப்பட்டன. மகேந்திரன் மகன், நரசிம்மப் பல்லவன், வைணவ மதத்தை ஆதரித்தான்.

இந்நிலையில், படைத்தலைவர், வாதாபியின் மாபெரும் வெற்றி பெற்ற மாவீரன், பரஞ்ஜோதி சைவன். பரஞ்ஜோதியின் புகழொளி கண்டு, வைணவருக்கு அருவருப்பு ஏற்படாமலிருக்க முடியுமா! மன்னனின் ஆதரவு வைணவத்துக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் வெற்றி ஒளியோ,சைவப் பரஞ்ஜோதிமீது வீசுகிறது—சைவர் பெருமையடைகின்றனர்—இது இத்துடன் நிற்குமோ, அன்றி, அரண்மனைக்குள், சைவம், புகுநிலை ஏற்படுமோ! பரஞ்ஜோதி புகழ் பெருகுவது, வைணவத்துக்கு இருட்டடிப்பாக முடியுமாயின், என் செய்வது என்ற அச்சம் அரிதாசர்களைப் பிடித்தாட்டிற்று.

ரஞ்ஜோதி, மாவீரன்; தமிழ் நாட்டின் திலகம்; பல்லவ சாம்ராஜ்யத்தின் மணிவிளக்கு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/16&oldid=1764360" இலிருந்து மீள்விக்கப்பட்டது