சாம்பல்
19
“அந்த முறை கூடாது! ஆனால், எப்படியேனும் பரஞ்ஜோதியை அரச அவையிலிருந்து நீக்கியாக வேண்டும். அவன் படைத்தலைவனாக வீற்றிருக்க விட்டால் வைணவம் தானாக நசிந்துவிடும்.”
“மன்னனோ, பரஞ்ஜோதியைக் கிடைத்தற்கரிய பொக்கிஷமாகக் கருதுகிறான்.”
“கருதுகிறானல்லவா! இனி மற்றவர்கள் செல்லாக்காசுதானே!”
“ஆமாம்!...”
“பரஞ்ஜோதி சைவன்! எப்படியேனும், ராஜசபையில் அவன் இனியும் இருக்க இடம் தரலாகாது.”
அச்சம் கொண்ட அரிதாசர்கள், இங்ஙனம் பேசிடாது இருக்க முடியுமோ! சைவம், பிரசாரத்தால் அல்ல; மன்னனிடம் செல்வாக்குப் பெற்று அல்ல, ஒரு மாவீரனின் வெற்றி ஒளியின் துணைகொண்டு இனி, செல்வாக்குப் பெறுமே, மன்னன் நரசிம்மன், அரிதாசன் என்று ஆனந்தமாகக் கூறினவுடன், ஆம்! ஆனால், படைத் தலைவர் பரஞ்ஜோதியார் சைவர் - அவர் பல்லவ நாட்டுக்கே மணிவிளக்காக உள்ளார்; அவர் சிவபக்தர்—என்றென்றோ சைவர் கூறுவர்!
அரச ஆதரவு அற்றுப் போய்விடுமோ என்ற அச்சம் கொண்ட வைணவர்கள், வாதாபியை வீழ்ச்சி பெறச் செய்த பரஞ்ஜோதியை, வைணவத்துக்கு வைரியாகிவிடக் கூடியவர் என்று எண்ணி ஏங்கினர். இந்த ஏக்கத்தைப் போக்கிக் கொள்ள, பேச்சு மட்டும் பயன் தருமா, செயலிலும் இறங்கியாக வேண்டுமல்லவா? என்ன செய்ய முடியும்? மெள்ள பிரச்சாரம் நடத்தினர். வருகிறது வைணவத்துக்கு ஆபத்து! மன்னன் நரசிம்மப் பல்லவனின் ஆதரவு பெற்ற வைணவத்துக்கு நெருக்கடியான நிலைமை வருகிறது. வாதாபியிலே பரஞ்ஜோதி பெற்ற வெற்றியைச் சைவர்கள் தமக்குச் சாதகமாகக் கொண்டு, சைவத்திற்கு அரச ஆதரவு கிடைக்கு மாறு செய்யப் போகிறார்கள். வீழ்ந்தது வாதாபி! தாழ்ந்-