உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாம்பல்‌

21

“ஆமாம் நண்பர்களே! அவன் கூறுவதிலும் அர்த்தம் இருக்கிறது. படை வீரர் காட்டிய வீரம் மட்டுமல்ல, வெற்றிக்குக் காரணம். படைத்தலைவர் பரஞ்ஜோதியாரின் அபாரமான ஆற்றலும், போர்த் தொழில் நுண்ணறிவுமேதான் வெற்றிக்கு முக்கிய காரணம்.”

“முக்கிய காரணம் என்று கூறினீர் வீரரே! பொருத்தமாகப் பேசினீர், வெற்றிக்கு முக்கிய காரணம் தளபதியின் தீரமும் திறமும். ஆனால் மூலகாரணம் ஒன்று இருக்கிறது.”

“அதென்னவாம், மூலகாரணம்?”

“உண்டு.”

“உண்டெனினும் கூறும். விழியை உருட்டினால் விஷயம் விளங்குமோ! பெருமூச்சு, எங்களுக்குக் கூறும் பதிலாகுமா?”

“எனக்குத் தெரியும் அந்த மூலகாரணம். கூறினால், நீங்கள் சரி என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்களே என்றுதான் அஞ்சுகிறேன்.”

“அறிவுக்குப் பொருத்தமானது எது கூறினும், மறுப்புரை கூறுவது எமது மரபன்றே. மூலகாரணம் என்ன? சொல், கேட்போம்.”

“உரைக்குமுன் ஒன்று, உம்மைக் கேட்கிறேன்; கோபியாது பதில் கூறவேண்டும். வீரமும் வீரரும், படைவரிசையும் படைக்கலன்களும், உங்கட்கு, பல்லவ வேந்தன் நரசிம்மன் காலத்துக்கு முன்பும் உண்டல்லவா?”

“ஏன் இல்லை! மன்னன் மகேந்திரன் காலத்தில் மாவீரர்கள் இருந்தனர்.”

“மகேந்திரன் காலத்திலே, போர் இருந்ததன்றோ?”

“ஆமாம்! போரிட்டோம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/21&oldid=1765267" இலிருந்து மீள்விக்கப்பட்டது