உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாம்பல்

23

ந்தச் சாளுக்கியன் அடிமைதான்! ஆனால் அவன் சொன்னது உண்மை. வெற்றிக் களிப்பு, அந்த வேதனையை மாற்ற முடியாது. எந்தப் புலிகேசி களத்திலே பிணமாக்கப் பட்டானோ, அவனுடைய வெற்றிமுரசு, பல்லவத்தின் தலைநகரத் தலைவாயிலில் கேட்டதை அத்தமிழ் வீரர்களறிவர். மகேந்திரன் காலத்தில் நேரிட்ட அந்த விபத்தைச் சாளுக்கியன் கவனப்படுத்தினான். என்ன கர்வம்! என்ன ஆணவம்! தோற்றோடிய துஷ்டன், துடுக்குத்தனமாகவும் பேசுகிறானே! வெற்றி வீரர்களாக இருக்கும் நம் எதிரிலேயே, நம்மை இழிவாகப் பேசுகிறானே! என்று கோபம் பிறந்தது முதலில். ஆனால் உடனே தணிந்துவிட்டது. அவன் உரைத்ததோ உண்மை! ஓர் நாள், காஞ்சிபுரம், பல்லவத்தின் தலைநகரம், இன்றோ நாளையோ, இரவோ, பகலோ, இப்போதோ, இன்னும் சற்று நேரத்திலோ, சாளுக்கியனிடம் சிக்கிச் சீரழியும் என்று வீரர்கள் எல்லாம் விசாரப்பட்ட நிலை இருந்தது. தோல்வி! துயரம்! வெட்கம்! வேதனை! அதனைத்தான், பிடிபட்ட சாளுக்கியன் கவனப்படுத்தினான். பிழை அல்ல, உண்மை.

ஆம்! அந்த நாள், அவர்கள் கவனத்துக்குக் கொண்டுவரப் பட்டதும், பழைய நிகழ்ச்சிகள் பலவும் மனக்கண்முன் தோன்றின.

பல்லவ சாம்ராஜ்யத்தைப் பதைக்க வைத்த புலிகேசி, அவர்கள் மனக்கண்முன் வந்து நின்றான்.

புலிகேசி, இராஷ்டிரகூடர், கடம்பர், கொங்கணர், இலாடவர், சேதிநாட்டவர், கலிங்கர், கோசலர், வேங்கி நாட்டவர் என்று பல்வேறு நாட்டவரை வென்று புகழ் பெற்றவன். சாளுக்கியாதிபதி சமர் செய்து வைரம் ஏறிய வீரனானான்! எங்கும் வெற்றியே கண்டான்.

புலிகேசியின் புகழ், வடக்கே இமயம் வரை மட்டுமல்ல, பாரசீக மண்டலம் வரை பரவிற்று. பாரசீக மன்னன் வெற்றிப்பவனி வரும் புலிகேசியிடம் தோழமை கொண்டாடுவதைத் தனக்குற்ற பெருமை எனக்கொண்டான். இமயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/23&oldid=1765269" இலிருந்து மீள்விக்கப்பட்டது