ஒளியூரில்
63
சொல்வதைக் கேட்டுக் கேட்டு எனக்கே இப்போது சந்தேகம் பலமாகிக் கொண்டுதான் வருகிறது என்று தனக்குத் தானே கூறிக் கொள்வார்.
வாசமல்லிகாவுக்குப் பூட்டி அழகு பார்க்கவும், பெருமைப் படவும், தம்மிடம் பொன்னும், பொருளும் இல்லையே என்று பண்டிதர் ஏங்கிக் கிடந்தாரே தவிர, அந்த வனிதை இயற்கையிடமிருந்து எழிலைச் செல்வமாகச் குறைவின்றிப் பெற்றிருந்தாள்: ஆபரணச் சுமைதாங்கிகள் அரண்மனையில் அசைந்தாடிக் கிடந்தனர்—இந்த அழகு மயிலுக்கு அவை தேவையற்றன! இருக்கவேண்டிய இடமறியாததால், முத்து மாலையும் மோகராக்குவியலும், மரகதமும் பிறவும், சீமாட்டிகளிடம் சிறைப்பட்டுச் சீரழிந்தன. இந்தச் சிங்காரிக்கு அவை ஏன்? முத்தும், பவழமும் அளித்தனை, இயற்கையே! எனினும் அவைதமை அணிந்து மகிழவா செய்தனை? பேழையிலிட்டுப் பாதுகாத்து வரும் வேளையில் அல்லவா என்னை விட்டிருக்கிறாய். பேழையிலுள்ளதை அவ்வப்போது சிலர், களவாடிச் செல்கிறார்கள்—‘ஓ’வெனக் கூவி, அவர்களைப் பிடித்திடத் துரத்திச் சென்றாலும், என்னைத் தடுத்து நிறுத்துகிறாள், நிலமடந்தை, என் செய்வேன்! கொடுத்தும் கெடுத்தாய், இருந்தும் பயனேதும் நான் பெற்றேனில்லை என்றல்லவா கடல் ஒலிக்கிறது, இயற்கையின் வஞ்சனையைக் கண்டு. இதோ செம்பவளத்தை அதரமாக்கி, முத்துக்களை அழகான பற்களாக அமைத்து, பொன்னைப் பொடி செய்து குழம்பாக்கி உடலெல்லாம் பூசி. தேயாத் திங்களாக முகத்தினைத் தீட்டி, நினைக்கும் போதெல்லாம், கனிச்சாறு ஊற்றெடுக்கும் வகையும் தந்து, வாசமல்லிகாவைத் தன் செல்லப் பெண் ஆக்கிக் கொண்டனையே என்று கத்துங் கடலொலி கேட்கிறது.
அவனல்லவா அதை அறிந்திருக்கிறான்! அந்தி நேரத்தில், ஆற்றோரத்தில், “எண்ணமதைக் கொள்ளையிட்ட வண்ணப்பூவே! எங்கு பெற்றாய் இத்தனை எழிலை எல்லாம்” என்று கேட்கிறான்! போதும் உமது பரிகாசம் என்று