ஒளியூரில்
73
தங்களையுமா சேரச் சொல்கிறார் என் தகப்பனார்? அவருடைய மனச்சாந்திக்கான மார்க்கத்தை அவர் தேடிக் கொள்கிறார் என்று வாசமல்லிகா வாதாட, “செல்வச் செருக்கு, உன்னைவிட்டு எப்படிப் போகும், மல்லிகா! கேவலம் சொத்துப் போய்விடுகிறதே என்று என் தகப்பனார் பதைப்பதாகக் கருதுகிறாய்—செல்வச் செருக்கல்லவா அதற்குக் காரணம்? அனாதி காலந்தொட்டு இருந்து வரும், மத மார்க்கத்தை இழித்தும் பழித்தும் பேசுபவருடன் எப்படி நாங்கள் உறவு கொள்ள முடியும்” என்று பேசுவான் பிரசாதன். கொதிப்பான பேச்சு—கோபமான பிரிவுகள்—இப்படி ஆகிவிட்டது நிலைமை.
கண்டதும் ஏற்படும் கனிவு—காதற்பேச்சிலே இருக்கும் கவர்ச்சி—இவை, குறையத் தலைப்பட்டன; மகிழ்ச்சி மங்கலாயிற்று.
“நேற்று முளைத்த ஒரு காளானுக்காக, நமது பூர்வீகப் பாரிஜாதத்தைக் காலால் மிதித்துத் துவைப்பவரை, அவர் யாராக இருப்பினும், நான் துச்சமாகத்தான் மதிப்பேன்.”
“அவரவரின் மனச்சாட்சிக்குத் தக்கபடி மார்க்க விஷயம் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மதிக்காதவர்களை நான் தூசுக்குச் சமமாகக்கூடக் கொள்ளமாட்டேன்.”
“நாவை அடக்கிப் பேசு! தந்தையைக் கேவலமாகப் பேசுவதைக் கேட்டுச் சகித்துக் கொள்ளும் மண்டூகமல்ல நான்.”
“மாவீரராகத்தான் இருங்களேன்...அதனால் உன் முன் மண்டியிட வேண்டுமா என்ன! உமக்கு உம்முடைய மதம், எவ்வளவு ஆபாசம் நிரம்பியதாக இருப்பினும் மேலானது; என் தந்தையும் அதே மதத்தில் நம்பிக்கை வைத்திருத்தவர்தானே! நவராத்திரி உற்சவ கைங்கரியமும் யாருடையதாம்! நாலுகால் மண்டபம் யார் கட்டியது? எத்தனை கோயில்களுக்குக் காணிக்கை கொடுத்திருக்கிறார். இப்போது அவர் மனதில், இந்த மதம் மோசமான கொள்கைகள்