இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
ருக்கும் பாங்கை இதில் நீங்கள் பரவலாகக் காணலாம். அந்தக் குழந்தையின் மூலமாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் விழிப்பை மட்டுமா, நல்ல வெளிச்சத்தையும் கொடுக்கக் கூடிய ஒன்றாகும்.
அத்தகு சிறப்புள்ள—உயிர்த் துடிப்புள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் கதைகளை நாங்கள் வெளியிட்டுக் கொள்ளும் உரிமையைப் பூரணமாக வழங்கி இருக்கும் திருமதி ராணி அண்ணாதுரை அவர்கட்கு எங்களின் இதயபூர்வமான நன்றி.
பூம்புகார் பிரசுரத்தார்