88
தஞ்சை
கொவ்வை அதரமாக, கடைக்கண்ணாக, இடை நெளிவாக, இசையாக, நாடகமாக, நானாவிதமான உருவிலே, கொஞ். சிக் கூத்தாடி, மன்னர்களைக் களிப்புக் கடலிலே தள்ளும்! அருக்கு மங்கையர் மலரடி வருடுவர் அரண்மனையில். எனி னும் ஆலயம் சென்று அரங்கனின் திருவடி சரணம் என்று பக்தியையும் சொரிவர்! சல்லாபிகளின் சதங்கை ஒலிக்கும், அரண்மனையில்--ஆலயமணியோசை மன்னன் மனதிலே பகவத் நாம சங்கீர்த்தனத்தின் பெருமையைப் பதிய வைக் கும்! கூந்தலைக் கோதும் கரங்கள் அரண்மனையில் - கூப்பிய கரங்கள் ஆலயத்தில்! இங்ஙனம் இன்பத்திலே மூழ்கியிருந்த. மன்னர்கள் காலம்! விஜயராகவனும், மகாபக்தன்--மகா சசிகன்! கடவுட் காரியமும் கலை ஆர்வமும், ஒத்த அளவு கொண்டிருந்தான்! காவியம் படித்தலும், ஓவியத்தைக் கண்டு களிப்பதும், தர்க்கம் கேட்பதும், பண்டித சிரோமணிகளிடம் பாடம் கேட் பதும், நாடகம் காண்பதும், நாதன் அருள் பெறும் மார்க் கத்தை ஆராய்வதும், விஜயராகவ வேந்தரின், நித்திய நட வடிக்கைகள். பிராமணோத்தமர்களின் மனம் துளியும் கோணலா காது என்ற திடம் கொண்ட தீரன், மகன் மன்னாரு என் பான், துள்ளுமத வேட்கைக் கணையாலே தாக்கப்பட்ட நிலையில் ஓர் ஆரியமங்கையிடம் தகாத முறையிலே நடந்து கொண்டது கேட்டு, மகனென்றும் பாராமல், சிறையில் தள்ளிய சீலன்! பூலோக ஸ்வர்க்கத்தில் பூதேவர் புடை சூழ கொலுவீற்றிருந்த கோமான்!! அந்த விஜயராகவ வேந்தர் மீது போர் தொடுத்தான் மதுரை சொக்கநாதன்! கடும் போர்! விஜயராகவன், வயோதிகப்பருவம்- சொக்கநாதன் படைகளோ சூறாவளி வேகத்தில், தஞ்சைத் தரணியைத் தாக்குகின்றன! மன்னன் மருண்டான்.--மகேசனை வேண்டி. னான் - மறையவர் குலத்துதித்த பெரியவரை நாடினான்-- சோமசுந்தர ஸ்வாமி என்பாரிடம் சென்று நிலைமையைக் கூறி, மார்க்கம் கேட்கலானான் மன்னன்..