94
பிணங்கள்
கையிலே இருந்த பணத்தை, அந்தக் குடிசையில் இருந்த பெண்ணிடம் கொடுத்தான். “ஐயா! கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். சாப்பாடு தயார் செய்கிறேன். ஆனால்…”
அப்போது நுழைந்த போலீசார், அந்தப் பெண்ணையும், நாகராஜனையும் கைது செய்தனர். ‘விபசாரக்’ குற்றம் சாட்டி, கோர்ட்டிலே நிறுத்தினர்.
‘நிரபராதி’ என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் நாகராஜன். ஆனால், அந்தப் பெண் எப்போதோ விபசாரக் குற்றத்திற்காக முன்பு, அபராதம் கட்டியவளாம்! இதை வைத்து, நாகராஜனுக்கும், அந்தப் பெண்ணுக்கும் ஆறு மாதத் தண்டனை என்று சொல்லி விட்டு, நீதிபதி எழுந்து நின்றார்.
சிலை போல் ஸ்தம்பித்து நின்ற நாகராஜன், நீதிபதி செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். நீதிபதி ஆணல்ல, பெண்!
“யார் அந்த நீதிபதி? நாயகியா அந்த நீதிபதி? நான் விபசாரம் செய்தேன் என்று விபசார நாயகியா தீர்ப்பளிப்பது? இது என்ன உலகம்?”
விழித்துப் பார்த்தான். அவன் இருந்த இடம் சிறைக்கூடம்.
முற்றும்