உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்னேதான்!

11

கேள்விப்பட்டு அப்பாசாமி அன்று சிறுவனை அடிஅடி என்று அடித்தார். முத்து பார்க்கிறான், எம்பெருமாள் சீட்டாடுகிறார் நண்பர்களுடன். அவருடைய மகன், எட்டு வயதுச்சிறுவன், 'இதைப் போடு! அதைப் போடாதே!' என்று சொல்கிறான். மகனுடைய அறிவை மெச்சி எம்பெருமாள் முத்தம் கொடுக்கிறார். என்ன உலகமடா இது! எனக்கு எதெது கூடாது என்று அப்பா சொல்லுகிறாரோ, அவைகளெல்லாம் எம்பெருமாளின் உலகத்திலே நடக்கின்றன. கண்டிப்பார் இல்லை. தண்டனை தருவார் இல்லை! நீதி நியாயம் என்றால் எல்லோருக்கும் பொதுவாக அல்லவா இருக்கவேண்டும் என்று முத்துச்சாமி நினைத்துக் கொண்டு கோபம் அடைவான். வெகுநாளைக்குப் பிறகுதான், நீதி நியாயம் இப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்ல எம்பெருமாளின் உலகமும், கேட்டு நடந்திட அப்பாசாமியின் உலகமும் இருக்கிறது என்ற உண்மையைத் தெரிந்துகொண்டான். இந்த இரண்டு உலகங்களிலும் தனக்கு இடம் இல்லை என்று கண்டு கொண்டான் முத்து! மூன்றாவது உலகத்திலே இடம்பெற்றான்; போக்கிரிகளின் உலகத்தில்.

"நான் எத்தனை அன்பு காட்டினாலும் இந்த உலகம் நம்பவாப் போகுது. மூத்தாளோட பிள்ளைகளை இளையா கொடுமை செய்கிறா என்றுதான் சொல்லப்போகுது. தப்பு செய்யும் போது அடிக்க வேணும். தொட்டாபோதும்; தெருக்கோடி கேட்கிறபடி கூச்சலிட்டுக் கொண்டு ஓடுவான். ஊர் என்னைச் சபிக்கும்; நமக்கு வேண்டாம் அந்தக் கெட்டபேரு. அவங்க அப்பாரே பார்க்கட்டும், கேட்கட்டும், வெட்டிப்போடட்டும். நான் தொட்டு அடிக்கவே மாட்டேன். ஒரு நாள் அடிச்சதுக்கு, பக்கத்து வீட்டுப் பொக்கைக் கிழவி வந்துவிட்டாளே, எனக்கு புத்திசொல்ல. 'வள்ளி! முத்து தாயில்லாத பையன்! கொடுமை செய்யாதேம்மா! என்று. நமக்கு எதுக்கு வீண் வம்பு. அது என் வயத்திலே பொறந்ததா இருந்தா, உடம்புத் தோலை உறிச்சி உப்புத் தடவுவேன். அடங்காதது; இருந்தா என்ன, செத்தா என்ன?"

சலிப்பு, கோபம், எரிச்சல், ஏழ்மை இத்தனை நோய்களுக்கு ஆளான வள்ளியால் இப்படித்தான் பேச முடிந்தது.