உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னேதான்!

17

"அழாதிங்க...என்னமோ நம்மோட போறாத வேளைதான், முத்துவுக்கு கெட்ட புத்தியைக் கொடுத்தது. கலங்காதிங்க..நம்மோட கஷ்டம் இத்தோட போயிடும் பாருங்க.அவனும் திருந்தி நல்லவனாயிடுவான்" என்றுகூறி அப்பாசாமிக்கு காப்பி கொடுத்தாள். அப்பாசாமி அதைச் சாப் பிடக்கூட இல்லை.

"ஒரு விஷயம் தெரியும்ங்களா...நம்ம வீட்டிலேயே பழைய சாமான்களிலே, சின்ன தாம்பாளத்தட்டு இல்லிங்க,அக்கா பூஜைக்கு உபயோகப்படுத்தும்னு சொல்விங்களே, பித்தளைத்தட்டு—அது பித்தளை இல்லிங்க, பொன்னுங்க பொன்னு..."

அப்பாசாமி, வள்ளியை உற்றுப் பார்த்தான். வள்ளி உள்ளே இருந்து பளபளப்பான தாம்பாளத் தட்டைக்கொண்டு வந்து அவனிடம் காட்டி,

"பித்தளைத் தட்டுன்னு எண்ணிக் கொண்டமே, அது தானுங்க இது. எங்க அண்ணன் வந்தது; அது நகை கடையிலேதானே வேலை பார்க்குது! அது பார்த்துவிட்டு 'வள்ளி,வள்ளி! இது பித்தளைன்னு யாரு சொன்னது உனக்கு? இது அசல் தங்கமாச்சே! மெருகு போடாததாலே இப்படி பித்தளைபோல இருக்கு'ன்னு சொல்லி, எடுத்துக்கிட்டுப்போயி,மெருகு போட்டுகிட்டு வந்து கொடுத்தது. தங்கம்ங்க. இந்தத் தாம்பாளம்! இதைப்போயி, நாம் பித்தளைன்னு எண்ணிக் கொண்டு ஏமாந்துகிடந்தமே இத்தனை காலமா" என்று விவரம் கூறினாள்.

தாம்பாளத்தைத் தன் கரத்தில் வாங்காமலேயே அப்பாசாமி மெல்லிய குரலில்,ஆனால் மிக உருக்கமாகச் சொன்னார்.

"ஆமாம் வள்ளி! அசல் தங்கம்தான்—எதை நாம் பித்தளை என்று எண்ணிக் கொண்டு இருந்தமோ, அது பித்தளை இல்லை; அசல் தங்கம்."

வள்ளிக்கு ஒன்றும் புரியவில்லை.


'காஞ்சி' பொங்கல் மலர் 1965