பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன புண்ணியம் செய்தனே! நெஞ்சமே! உன்னே இழிவாக அல்லவா பலர் பேசுகிருரர்கள்? நானும் அப்படிப் பேசியதுண்டு. ஆனல் இப்போது கிடைத்திருக்கும் பாக்கியத்தை கினைத்தால் நீ என்ன விதமான புண்ணியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று தோற்றுகின்றது. பொதுவான புண்ணியமாக இருந்தால் இந்தப் பேறு கிடைத்திராது. ஏதோ மிகச் சிறப்பான புண்ணியம் செய்திருப்பதல்ைதான் இந்த இன்ப அநுபவம் கிடைத்திருக்கிறது.

ஒருகாளா, இரண்டு காளா ? எத்தனே காலம் நீ என்ைேடு வாழ்கிருய் எத்தனே இடங்களில் நான் பிறந்து வாழ்ந்தாலும் அங்கெல்லாம் என்ைேடு ஒட்டி வாழ்கிருய்! பெரிய கடல் சூழ்ந்த வையத்தில் இடப்பரப்புக்குப் பஞ்சமா? இந்த விரிந்த உலகத் தில் எல்லே காண்பதற்கரிய காலமாக உன்னுடன் நான் வாழ்கிறேன். இத்தனே காலத்திலும் நீ என்ன என்னவோ செய்திருக்கிருய். நீ நல்லது செய்தால் நான் வாழ்வேன்; அல்லது செய்தால் தாழ்வேன். கல்வினே பல செய்திருத்தலினுல்தான் மானிடப் பிறவி கிடைத்திருக்கிறது. எம்பெருமான கினைந்து வாழும் வாழ்க்கை கிடைப்பதற்குப் பல காலமாக முன்பு கல்வினை பல செய்திருக்க வேண்டும்.

ஆல்ை இப்போது கிடைத்திருக்கும் பாக்கியத் துக்கு அந்த கல்வினைக்குள்ளும் மிகச்சிறப்பான புண். ளிையச் செயல்களே காரணமாக இருக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/89&oldid=597061" இலிருந்து மீள்விக்கப்பட்டது