பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 45 கூடாது. அவ்வப்போது தேக உஷ்ண நிலையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். 8, உறக்கமும் ஒய்வும் கர்ப்பவதிகளுக்கு ஓய்வு மிக முக்கியம்; இரவிலும் பகலிலும் நல்ல ஓய்வு கொள்ள வேண்டும். அமைதி யான-காற்றோட்ட வசதியுள்ள இடத்தில் கர்ப்பவதிகள் உணவுக்குப்பின் ஒன்றிரண்டு மணிநேரம் ஒய்வெடுத்தால், பிறகு அது உதவும். அம்மாதிரிக் காலங்களில் உடைகள் இறுக்கமாக இருக்கவே கூடாது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது உறக்கம் கொள்ள வேண்டும். - 9. ஊர்ப்பயணம் கருவுற்ற பெண்கள் இயன்றவரை கார்களிலும், பஸ் களிலும் பயணம் செய்வதைக் குறைக்க வேண்டும். அதிலும், கருவுற்ற நிலை நிர்ணயமாகும் அந்த நான்கு மாதங்கள் வரை நெடுந்துரம் வண்டிகளிலோ அல்லது புஸ்களிலோ பிரயாணம் செய்வது தவறு. இதனால் உடலில் அயர்வும் அசைவும் ஏற்பட்டு, கர்ப்பம் கலைந்து விடவும் சிதைந்துவிடவும் வழி பிறக்கக்கூடும். அது போலவே, எட்டுமாதத்துக்கு மேலேயும் பயணம் செய்வது தவறு. ஊர்ப்பிரயாணம் தவிர்க்க முடியாததானால், டாக்டரின் ஆலோசனைக்குப் பின்னரே அதை ஸ்திரப் படுத்திக் கொளள வேண்டும். கூடியவரை ரயிலில் செல்வது நல்லது. * • , - 10. மார்பகச் சுத்தம் நவீன விஞ்ஞானமும் மருத்துவ ஆலோசனையும் கர்ப்பவதிகளின் மார்பகச் சுத்தி பற்றி வெகுவான கவனம் கொள்கின்றன. பிறக்கப் போகும் சிசுவுக்குச் சம்ரட்