பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பிரசவ கால ஆலோசனைகள் சுகப் பிரசவம் ஆகும் வகையில் இப்போது சிசு தலை கீழாக வைக்கப்படும். ஆகாரம் முதலிய கர்ப்பகாலக் கவனிப்புகள் தீவிரத். துடன் இயங்குவது உயர்வு தரும். சாதாரணமாக, குழந்தைகள் தலைகீழாகவே வெளிப் படும். முதலில் சிரசுதான் உதயமாக வேண்டும். சிசுவின் முதுகெலும்பு வளைந்து, அதன் பிஞ்சுக் கரங்களை மார் பின் குறுக்கே ஒன்றன்மீது ஒன்று சேர்த்துக் கொண்டு இருக்கும். கால்கள் மடிந்து அடிவயிற்றுடன் சேர்ந்திருக் கும். கருப்பையில் இப்படி இருப்பதுதான், சிசு இலகுவாக, வெளியேறச் சிறந்த வழியாகும். கடைசி இரண்டு மாதங்களில் தாம்பத்திய உறவு கொள்ளுதல் தகாது. வலப் பக்கம் வயிறு தள்ளியிருந்தால் பிறக்கப்போகும் குழந்தை ஆண்’ என்றும், இடப் பக்கம் தள்ளியிருந்தால் பெண் என்றும் குறி சொல்லப்படுகிறது! 9. ஒன்பதாம் மாதம் தன்னுடைய ரத்தத்தின் மறு ரத்தமாகத் திகழும் சிசுவைக் கையிலேந்தி, அதன் கன்னங்களில் முத்தங்களை வரையாது வழங்கிக் கள் வெறிகொள்ளத் துடித்துக் கொண்டிருக்கும் கர்ப்பிணிகளின் கனவை, கனவு ரூப்த், தில் சந்திக்கும் பொன்மிகு நந்நாள் அண்டிக்கொண்டிருக் கும் காலம் இது. யோனி மூலம் கைவிட்டுப் பார்த்தல் elpaiso (Bimanual Examination) @p fisosolu Gul isfighââ முடியும். கருப்பையினுள்ளே சிசு புரள்வதைக் கண்களால் பார்க்க முடியும். சிசுவின் இருதயம் (fatal heart) இப் போது நிமிஷத்துக்கு 120-130 முறை வீதம் அடித்துக் கொள்கிறது. அடிவயிறு இதற்குமேல் விரிவடைவதில்லை.