பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பிரசவ கால ஆலோசனைகள் தாகவேண்டும். சிறுநீரில் அல்பூமன் (Albumier) எனப் படும் பிசிதம் கலந்திருந்தால் கைகால் வீக்கம் தொடங்கி, அதன் மூலம் இசிவு நோய் வரவும் கூடும். இவற்றின் சிகிச்சைக்கு டாக்டர்களின் உதவி வேண்டும். வெந்நீர் சாப்பிட்டால் நீர் பிரியும். நீரும் மலமும் அடைபடும். எனிமா கொடுக்கலாம், சுடுநீரைத் தொட்டி யில் நிரப்பி, இடுப்பு ஸ்நானம் செய்யலாம். நீர்த்தாரை யில் ரணம் இருந்தாலும், கருப்பை நிலை பிசகியிருந் தாலும், மனப்பாதிப்பு ஏற்பட்டாலும் நீரடைப்பு உண் டாகும். பிரசவ வேதனையிலும் இந்நிலை சம்பவிக்கும். நீர் பருகுதலை அடிக்கடி கையாளவேண்டும். பார்லித் தண்ணிரை அடிககடி குடிக்கவேண்டும். அத்துடன், சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும். எச்சில் ஊறல் இப்போது வாயில் அடிக்கடி எச்சில் உண்டாகும். கடுக்காயைத் துாள் செய்து அதை வெந்நீரில் கலக்கி அடிக்கடி வாய் கொப்புளித்தால், வாயில் புளிப்புச் சுவை யுடன் ஊறும் உமிழ் நீர் மட்டுப்படலாம். - மசக்கை: - - - கருத்தரிப்பு ஏற்பட்டவுடனேயே கர்ப்பிணிகளுக்கு மசக்கை வந்துவிடும். இது ஒரு நோயன்று; ஆனாலும், பலம் குறைந்து, ரத்த ஊட்டம் குறைவு பட்டவர்களுக்கு இம்மசக்கை அதிகமாகப் பாதிக்கும். அதிலும் தலைச்சன் பிள்ளைக்காரிகளுக்குப் புதிய அனுபவம் காரணமாக, இதனால் ரொம்பவும் தொல்லை ஏற்படுவதாகத் தோன்றும். உடற்சோர்வும் களைப்பும் காலை நோயான வாந்தி, குமட்டல், தலைவலி போன்றவையும் உண் டாகும்.