பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாரணைக்‌ கர்த்தர்‌ தீர்ப்பு

197

செய்ய அவர்களுக்குப் பூரண அதிகாரங் கொடுத்திருப்பதாகவும் கவர்ன்மெண்டாருடைய உத்தரவினால் தெரியவந்தது. அதைப் பார்த்தவுடனே, இனி மேல் எப்படியும் நியாயங் கிடைக்குமென்று நாங்கள் எல்லோரும் ஆனந்த பரிதர்கள் ஆனோம். பிற்பாடு மேற்படி விசாரணைக் கர்த்தர்கள் இடத்திலிருந்து வந்த உத்தரவில் வேதபுரி என்னுமூரில் விசாரணை நடக்குமென்றும் சகல சாக்ஷி சாதனங்களுடன் அவ்விடத்துக்கு வரும்படியாகவும் ஆக்ஞாபிக்கப் பட்டிருந்தது. அந்தப் பிரகாரம் ஆதியூரிலும் பக்க ஊர்களிலும் வசிக்கின்ற தகுந்த கௌரவமுள்ள பெரிய பிரபுக்களும் நானும் என் தகப்பனாரும் சம்பந்தி முதலியாரும் சாந்தலிங்கம் பிள்ளையும் சந்நியாசியாரும் உள்பட நூறு சாக்ஷிகள் சகிதமாக தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் பயண சந்நாகமாய்ப் புறப்பட்டு வேதபுரிக்குப் போனோம். அந்த மூன்று விசாரணைக் கர்த்தர்களில் இருவர் கலெக்டர் வீட்டில் இறங்கியிருப்பதாகக் கேள்வியுற்று நாங்கள் குறு விசாரம் அடைந்தோம். ஆயினும் மூன்று துரைமார்கள் கூடி அநியாயஞ் செய்ய மாட்டார்களென்று நாங்கள் எங்களைத் தைரியப் படுத்திக் கொண்டோம். விசாரணைக் கர்த்தர்கள் தேவராஜப் பிள்ளையை முந்தி விசாரித்தார்கள். அவர் கனகசபை பிறந்தது முதல் நடந்த ஒவ்வொரு சங்கதியையும் விடாமல் பரிஷ்காரமாய் வாக்குமூலம் எழுதி வைத்தார். பிற்பாடு சந்நியாசியாரையும் கனகசபையையும் அவனை வளர்த்த தகப்பனாரையும் என்னையும் என் தகப்பனாரையும் சம்பந்தி முதலியாரையும் தனித்தனியே விசாரித்தார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு விஷயத்தையும் பூரணமாகத் தெரிவித்தோம். பிற்பாடு நாங்கள் கொண்டு போன பெரிய மனுஷர்களையும் பின்னும் அந்த விசாரணைக் கர்த்தர்களுடைய இஷ்டப்படி வரவழைக்கப் பட்ட நூறு பிரபுக்களையும் பிரத்தியேகம் பிரத்தியேகமாய் விசாரித்தார்கள். அவர்கள் எல்லோரு ஒரே வாக்காய்த் தேவராஜப் பிள்ளை பட்சத்தில் சாட்சி சொன்னார்கள். விசாரணைக் கர்த்தர்கள் அவர்கள் கையிலிருந்த ஒரு கடிதத்தைத்