பக்கம்:பிராயச்சித்தம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 லா. ச. ராமாமிருதம் அவர்களுக்கே உருப்படியாகத் தெரியாது. அடிப்படை ஒரு அடிச்சோம்பேறித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். மதியம் சமையலில் மிஞ்சியதை வைத்துக் காலத்தை ஒட்டு. சிவன் கோவிலைத்தவிர ஒரு மைல் வட்டாரத்தில் குருக்கள் ஒரு பிள்ளையார் கோவிலிலும் மாரியம்மன் கோவிலிலும் பூசை செய்தார். எல்லா கோயிலுக்கும் ஒரே நைவேத்திய மூட்டை. இலையில் வட்டிக்கையில் அந்த அன்னம் சில்லிட்டுப் போய் ஒரு மாதிரியாக வேர்த்துக் கொண்டு வேல் வேலாக சாதம் விரைத்துக்கொண்டு அப்புறம் மூன்று நாட்களுக்கு விருந்தாளி கஷ்டப் பட்டான். ஏற்கனவே தர்மராஜனுக்கு குடல் நுட்பம், காரமே தாங்காது. நல்ல காலமே பார்த்திராத மனிதன் பாதி மிருகமாகி விடுகிறான். கூடவே கொஞ்சம் மறை லூஸ். சாப்பிடு கையில் குருக்கள் தான் தஞ்சாவூரில் இருந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். சொன்னதையே சொல்லிக் கொண்டு வந்த ஆள், தான் சொல்வதைக் கவனிக்கிறானா என்ற நினைப்பே இல்லாமல் தன் குரலைத் தானே கேட்டுக் கொண்டிருந்தார். வாய் ஒய வி ல் ைல. மறுநாள் ஸ்ணானத்தை முடித்துக்கொண்டு (சாப்பிடவில்லை) கிளம்பினாற் போதும் என்றாகிவிட்டது. குருக்களுக்கு இரண்டு பெண்கள். அங்கிருந்தவரை தாயார் கண்ணில் படவில்லை. ஆகையால் இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். குருக்களின் ஒட்டை வாய்க்கு குடும்ப ரஹஸ்யம் என்றே தங்காது போலும். மூத்த பெண் கணவனுடன் வாழவில்லை. வீட்டுக்கு வந்துவிட்டாள். இது தெரிந்துகொண்டு எனக்கு என்ன ஆக வேண்டும்? மானசீகமாகத் தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர,