பக்கம்:பிராயச்சித்தம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 165 பாய் எண்ணங்களும் உங்கள் வர்க்கத்தினுடையதுதான். தெரியாவிட்டால் இப்போது தெரிந்துகொள். உனக்குத் தெரியத்தான் இல்லை.” 'என்ன தெரியவில்லை? குழந்தையாகி விட்டான் தர்மராஜன். "அப்படிவா வழிக்கு. தெரிந்துகொள்ள ஆசைப் பட்டால், அதுவே வழிதான். இதோ பார் நீ வந்திருக்கும் உத்தேசப்படி, நீ கடலில் விழுந்து மூழ்கிப் போனால், கடலும் வானும் ஒலியும் உன் சாவால் அஸ்தமனமாகி விடுமா? உன் சாவு ஒரு கண்க்கு என்று நினைக்கிறாயா? உங்கள் வர்க்கம் குறிப்பிடும் பிறப்பும் சாவும் கணக் கில்லை. அலைகள் நாங்களே கணக்கில்லை. கரையோரம் காற்றில் அலைகிறோம் திரள்கிறோம் வருகிறோம் மோது கிறோம் மீள்கிறோம் நாங்கள். கணக்கில்லை. ப்ரக்ஞை யின் தடம், மொழி எல்லாமே வேறு தம்பி. நீ தம்பியோ, மகனோ, தந்தையோ, அந்த உறவுகளின் மறுபாலோ, நீயோ, நானோ, அதுவும் உங்கள் வர்க்கத்தின் பாஷை தான்-அலைகள் நாங்கள் உங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டேயிருக்கிறோம். எங்கள் சிரிப்பை எங்கள் நுரையின் வெண்மையில் பார்!' இரு கைகளாலும் தர்மராஜன் தலையைப் பிடித்துக் கொண்டார். 'ஆ அதுதான் வழி. ப்ரக்ஞையின் தன்மை கேள். அதற்கு மொழியே இல்லை அதன் வழியில் கடல் என்றால் கடல் இல்லை-ப்ரக்ஞையின் ஆழம். ஒலி என்றால் ஒலி அல்ல-ப்ரக்ஞையின் மோனம். வானம் என்றால் வானம் இல்லை-ப்ரக்ஞையின் வியாபகம். பிரக்ஞை என்பது ஒரு புன்னகை, ஆழம், மோனம் அர்த்தம் காணமுடியாத புன்னகை. சிருஷ்டியே அப்புன்னகை அலைகள்தாம். இதில் நீயும் உன் பிறப்பும், சாவும் எந்த மூலை? இப்போ உனக்கே சிரிப்பு வருமே, எங்கே சிரி, சிரி, சிரி.'