பக்கம்:பிறந்த மண்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 பிறந்த மண்

தெல்லாம் எதற்கெடுத்தாலும், எந்தப் பெரிய காரிய்ம் நடக்கவேண்டியிருந்தாலும் பிள்ளைகள் தலையெடுத்துத் தானே ஆகவேண்டியிருக்கிறது.” - - "உண்மைதான். என் நிலைமையையே பாருங்களேன், மணியக்காரரே! இந்தச் சனியன் பிடித்த நோக்காடு வந்த நாளிலிருந்து என்னால் ஒருத்தருக்கும் ஒரு பயனும் இல்லை. பெற்றது இரண்டு பெண்கள். இந்த "இட்லிக் கடை" என்று ஏதோ பேருக்கு ஒரு நம்பிக்கை இருக்கக்கொண்டு, காலம் தள்ள முடிகிறது. அதுவும் ஒரு துரும்பை இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் எடுத்துப் போடுகிற வேலையைக் கூட என்னால் செய்யமுடிவதில்லை. ஆண்டவன் புண்ணி, யத்தில் என் பெண்கள் இருவரும் குடும்பப் பாங்கு அறிந்து சொன்ன வார்த்தையை மீறாமல் நடந்து காரியம் பார்ப்ப தனால்தான் நான் காலம் தள்ளமுடிகிறது.”

வாழ்க்கையை அணு அணுவாக அனுபவித்து உணர்ந்து தெரிக் துகொண்ட ஒரு முதிர்ந்த பெண்ணும் ஆணும் பேசிக் கொள்கிற இயற்கைப் பண்பு நிறைந்திருந்தது, காந்திமதி ஆச்சியும், நாராயண்ப் பிள்ளையும் பேசிக்கொண்ட பேச்சில், வாழ்க்கையின் தத்துவமே இப்படி அனுபவித்து அனுபவித்து உணரவேண்டிய ஒன்றுதான் போலிருக்கிறது. புத்தகத்தை மட்டுமே படித்துவிட்டு வாழ்க்கையின் அனுபவங்களில் தோய்ந்துவிட்ட மாதிரி எண்ணிக்கொண்டு புத்தகங்களை எழுதிக் குவிக்கிறார்களே. தெரிந்தவர்கள் தமக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவதைவிட ஒன்றும் தெரியாத விஷயத்தைப்பற்றி ஒன்றும் தெரியாத வர்கள் அதிகம் தெரிந்ததுபோல் பேசுவது இந்த உலகத்தில் நாகரிகமான வழக்கங்களில் ஒன்றாகிவிட்டதே.

உலகத்தின் ஒரு மூலையில் எங்கோ மலைத் தொடர் களுக்கு நடுவிலுள்ள அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் ஒர் இட்லிக் கடையின் உள்ளே அவர்கள் சராசரியானசாதாரணமான வெறும் குடும்பப் பிரச்சினைகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/100&oldid=596804" இலிருந்து மீள்விக்கப்பட்டது