| 36 - பிறந்த மண் ஆனால், எல்லாம் அவள் இல்லாதபோதுதான். அவள் நிலை யைப் பார்த்து விட்டால் மனிதர் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார். பேச்சு, மூச்சு இருக்காது. அவள் சொன்ன படி ஆடுவார். இன்று, நேற்றல்ல, மூன்று வருஷங்களாக இப்படித்தான் நடந்துகொண்டு வருகிறது. பூர்ணாவை அடக்கி வசப்படுத்தி விடவேண்டுமென்று இப்போதுதான் உங்களை முதன்முதலாகக் கொண்டுவந்து உட்கார்த்தி யிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு முன்னாலும் ஐந்தாறு பேர் இதே வேலையில் இருந்திருக்கிறார்கள். உங்களுக்குச் செய்தது போலவே அவர்களையும் அதே அறைக்குள் மேஜை, நாற்காலி போட்டு உட்கார்த்தியிருக்கிறார்...” அப்படியா? இருக்காதே என்னைத்தான் முதன் முதலாக் அந்த அறைக்குள் உட்கார்த்துவதாக அல்லவா அவர் என்னிடம் கூறினார்’-அழகியநம்பி குறுக்கிட்டுப் பேசினான்.
- கூறுவதற்கென்ன? அந்த வேலைக்கென்று வந்த ஒவ் வொருவரிடமும் அப்படித்தான் கூறியிருப்பார் அவர். பிரம நாயகம் கூறுவதெல்லாம் உண்மையென்று நீங்கள் நினைத் தால் அது உங்களுடைய தவறல்லவா?"
அழகியநம்பி மறுபடியும் தலைகுனிந்து கொண்டான். "பூர்ணாவின் சூழ்ச்சிகளைத் தாங்கமுடியாமல் ஒவ்வொரு வனும் ஒவ்வொரு விதத்தில் போய்ச் சேர்ந்தான். அவற். றையெல்லாம் விவரித்துச் சொன்னால் ஒவ்வொன்றும் ஒரு கதைபோல் இருக்கும். எல்லாருடைய கதைக்கும் முதல் அத்தியாயம் ஒரே மாதிரிதான் ஆரம்பமாகும். முடிவுகள் தான் வேறு வேறு விதமாக இருக்கும். இன்றைக்கு உங்க ளிடம் பூர்ணா நடந்துகொண்டாளே, இதே மாதிரிதான் அந்த இடத்தில் வேலைக்கு வந்து உட்காரும் ஒவ்வோர் இளைஞனிடமும் நடந்துகொள்வாள். அவளிடம் என்ன்