பக்கம்:பிறந்த மண்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r, urfಹಹಕTvಣ 143 சர்க்கார்-காட்டிலாகாவின் பாதுகாப்புக்குட்பட்ட மலைப்பகுதிகளில் பெயருக்குச் சிறிது பணம் கட்டிப்பட்டுப் போன-காய்ந்து வற்றிய மரங்களை மட்டும் வெட்டிக் கொள்ளலாம்.என்று லைசென்ஸ்.பெற்றுக்கொண்டு பச்சை மரங்கள், பலனுள்ள மரங்கள்-எல்ல்ாவற்றிலுமே கை வைத் தார் அவர். இப்படிச் செய்கிறீர்களே’-என்று கேட்பதற் காகத் திறந்த வாய்களில் எல்லாம் பணத்தைப்போட்டு அடைத்து வைத்தார். பத்து லட்ச ரூபாய் இலாபம் கிடைக் கிறபோது புத்து ரூபாயை அந்தக் காரியத்துக்கு ஒத்துழைக் கிறவர்கள் பக்கம் வீசி எறிந்துவிட்டால் குடியா முழுகி விடும்? பச்சை மரங்களையும் பயனுள்ள மரங்களையும் வெட்டக் கூடாதென்று லைசென்ஸிலும் சட்டத்திலும் நிபந்தனைகள் இருக்கின்றன! இருந்தால் இருக்கட்டுமே அவற்றை யாராவது கவனித்தால் தானே? பன்னீர்ச்செல்வத்தின் கை இந்தப் புதிய தொழில் துறையில் மேலும் ஓங்கிக்கொண்டு வந்தது. இந்தத் தொழில் உபயோகத்துக்காக அவருக்கு இன்னொரு வீடு தேவையாக இருந்தது. விறகு, கரி, மூட்டைகளை "ஸ்டாக்" வைத்துக் கொள்வதற்குக் கிட்டங்கிபோல் ஓர் இடம் வேண்டியிருந்து, ஏற்கெனவே தமக்கு உரியனவாகியிருந்த வீடுகளில் மாத வாடகை பேசி ஆட்களைக் குடிவைத்துவிட்டதனால்,:வேறு எந்த வீடு தம் வலையில் சிக்கும்?' என்று யோசித்துக் s கொண்டே இருந்தார் - அழகியநம்பி கொழும்புக்குத் கப்பலேறிவிட்டான் என்ற வுடன் அவருக்கு ஒரு நம்பிக்கை உண்டாயிற்று. கடனைத் தரச் சொல்வி மிரட்டினால்-பழைய காலத்து மாதிரியில் அரண்மனை போல் கட்டப்பட்ட அந்தப் பெரிய வீடு தன்னு டைய கைக்கு வந்துவிடும் என்ற சபலம்.தட்டியது பன்னீர்ச் செல்வத்திற்கு. ஆண்பிள்ளையில்லாத வீடு. நாலுமுறை. நேரில் போய் அதட்டிக் கேட்டால், இப்போது எங்கள்ால் ஒன்றும் கொடுக்க முடியாது இருப்பது இந்த வீடு ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/145&oldid=597319" இலிருந்து மீள்விக்கப்பட்டது