பக்கம்:பிறந்த மண்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 பிறந்த மண்

மேலுஜமேல் வைத்திருந்த கடிதங்களையும், பைல்களையும் அர்ட்டி எதையோ தேடுகிறவளைப் போலத் தேடினாள். பின்பு திடீரென்று அவன் பக்கமாய்த் திரும்பி, மிஸ்டர் அழகிய நம்பி! உங்களைத் தானே! கொஞ்சம் இப்படி வாருங்கள்-என்று அதிகாரத்தின் முழு அழுத்தமும் நிறைந்த குரலில் அவனைக் கூப்பிட்டாள் -

அழகியநம்பி எழுந்திருந்து அவள் மேஜைக்கு முன்னால் போய் நின்றான். இந்த மேஜையின் மேல் இரண்டாயிரம் ரூபாய்க்கு செக்-ஒன்று வைத்திருந்தேனே? செக்கையும் காணவில்லை. அதோடு டைப்செய்து வைத்திருந்த கடிதத் தையும் காணவில்லை.”*

'அப்படி எதுவும் மேஜைமேல் நான் பார்க்கவில்லையே? நீங்கள் வேறெங்காவது கைத் தவறுதலாக வைத்திருப் பீர்கள். நன்றாகத் தேடிப் பாருங்கள்.”

அழகியநம்பி பவ்வியமாகத்தான் பதில் சொன்னான், பூர்ணாவின் குரலில் சூடு ஏறியது. சாதாரணமாகக் கூப்பிட்டுக் கேட்டவள், குத்தலாகப் பேச்சைத் தொடங் கினாள். உங்களுக்குத் தெரியாமல் வேறு எங்கே போக முடியும்? நீங்கள்தானே இப்போது இந்த ஆபீஸில் என்னை விடப் பெரிய அதிகாரி? என்னுடைய பைல்கள், கடிதப் போக்கு வரவுகளையெல்லாம் கூடத் தினந்தோறும் நீங்கள் தானே மேற்பார்வை செய்கிறீர்களாம்?”

-அழகிய நம்பி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றா மல் தலையைக் குனிந்துகொண்டு நின்றான்.

'உங்களுக்கு யோசனைகள் சொல்லிக்கொடுப்பதற்குவழி காட்டுவதற்குப் புதிய நண்பர்களெல்லால் ஏற்பட்டிருக் கிறார்கள். இனிமேல் பூர்ணாவையே இந்த ஆபீலிலிருந்து வெளியேறச் செய்துவிடுவீர்கள் நீங்கள். அப்iடித்தானே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/190&oldid=597627" இலிருந்து மீள்விக்கப்பட்டது