பக்கம்:பிறந்த மண்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 285

முருகேசன் கூறிச் சென்றது நினைவுக்கு வந்தது அவனுக்கு. காய்கறிகளையே பயிர்செய்ய நினைத்தான். அப்போது மார்க்செட்டில் அதிக விலையாகும் உயர்ந்த ரகக் காய்கறி களாகப் பயிர்செய்தான். உயர்ந்த வித்துகளாகத் தேடி வாங்கி வந்தான். ஒரு பகுதியில் தக்காளி, இன்னொரு பகுதியில் முட்டைக்கோஸ், மற்றொரு பகுதியில் உருளைக் கிழங்கு,வேறொரு பகுதியில் கேரட்,முக்கால் ஏக்கர் அளவில் சீமை வெங்காயம்-பயிரிட்டு முடிந்த்தும் தன் உழைப்பின் முழுசக்தியையும், நம்பிக்கையையும், இலட்சியத்தையும்ஏன் சகலத்தையுமே அந்த மண்ணில் விதைத்து விட்டது போன்றதொரு திருப்தி அவனுக்கு ஏற்பட்டிருந்தது. மலையி லிருந்து, காட்டுப் பன்றிகள், கரடிகள், இறங்கி வந்து நிலத் தைக் கிளறிப் பாழ்படுத்திவிடாமல் நடுவில் பரண் போட்டுக் கொண்டு இராப் பகலாகப் பார்த்துக் கொண்டிருந்தான். முள் வெட்டி வேலி அடைத்தான்.

ஊரை மறந்து, வீட்டை மறந்து, தன்னையே மறந்து அந்த நிலமே கதியென்று கிடந்தான். கண்ணை இமை காப்பதுபோல் அந்த நிலத்தைக் காத்து வந்தான். இந்த ஒன்றரை மாதத்திற்குள் அவன் உடல் கறுத்து அழகிழந்து போயிருந்தது. தசைகள் இறுகி உழைப்புக்கே உரிய முரட்டுத் தன்மை ஏறியிருந்தன. சட்டைபனியன்,போட்டுக் கொண்டு சுற்றியது மறந்தே போய்விட்டது அவனுக்கு. அரையில் அழுக்கடைந்த நாலு முழம் வேட்டியோடும், திறந்த மார்போடும். வெயிலென்றும், பணியென்றும் பாராமல் காத்துக்கொண்டு கிடந்தான் அவன். மாடு கட்டிக் கொள்வதற்கும், வண்டி நிறுத்திக் கொள்வதற்கும், விவசாயக் கருவிகளை வைத்துக்கொள்வதற்கும்-அந்த அருவிக் கரையில் ஒரு கீற்றுக் குடிசை வேய்ந்துகொண்டான். நாள் செல்லச் செல்ல அவன் ஊருக்குள் வருவதே குறைந்து விட்டது. தென்காசியில் வாங்கிய கடனில் எஞ்சியிருந்ததை அப்படியே வீட்டில் கொடுத்துவிட்டான். வேளாவேளைக் குப் படுகை நிலத்தைத் தேடிக்கொண்டு உணவு வந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/287&oldid=597863" இலிருந்து மீள்விக்கப்பட்டது