பக்கம்:பிறந்த மண்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - - பிறந்த மண்

-இதை எழுதி முடித்ததும் காந்திமதி ஆச்சிக்கும் சுருக்க மாக ஒரு கடிதம் எழுதினான் அவன். தான் , செளக்கியமாக வந்து சேர்ந்ததைப்பற்றியும், கொழும்புநகரத்தின் பெருமை யைப் பற்றியும் குறிப்பிட்டுவிட்டுப் பகவதிக்கும். கோமு வுக்கும் தன். அன்பைக் கூறுமாறும், அவர்களுடைய சுகத் துக்கும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்குமாறும், எழுதி அந்தக் கடிதத்தை முடித்திருந்தான். பெருமாள் கோயில் நாராயணப்பிள்ளைக்கும் ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்திலேயே புலவர் ஆறுமுகம், மேலத்தெரு வாசக சாலைச் செயலாளர் கந்தப்பன், முன்சீப் புன்னைவனம் பிள்ளை-எல்லாருக்கும் தன் அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்குமாறு மொத்தமாக வேண்டிக் கொண்டிருந்தான். நண்பர்களிலும் எல்லாருக்கும் அவன் தனித்தனியே கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கவில்ல்ை. எல்லா நண்பர் களினும் மேலாக அவனிடம் மனம்விட்டுப் பழகியவன் முருகேசன். அவனுக்கு ஊர் தென்காசி. தான் கொழும்புக்கு வந்திருப்பது பற்றி அவனுக்குத் தெரிவித்தால் அவனிட மிருந்தே மற்றவர்களுக்கும் அந்தச் செய்தி பரவி விடும் என் பதை அழகியநம்பி அறிவான். முருகேசனுக்கு எழுதிய கடி தத்தில் தன்னுடைய புதிய இடத்தையும், த்ன் நிலை களையும் எதிர்காலத்தையும் பற்றிச் சற்று விரிவாகவே எழுதியிருந்தான். - - கடிதங்களை எழுதி முடித்தபோது சமையற்காரன் சோமு அறைக்குள் நுழைந்தான். -

"என்ன வேண்டும் உனக்கு?’-என்று, தான் எழுதி முடித்த கடிதங்களை அடுக்கிக் கொண்டே உள்ளே நுழைந்த சோமுவைக் கேட்டான் அழகியநம்பி. "எனக்கு எழுதத் தெரியாது தம்பி கடிதம் எழுத வேண்டும். என்ன எழுத வேண்டுமென்று சொல்கிறேன். இந்தக் கடிதத்தையும் சிரமம் பாராமல் எழுதிக் கொடுத்து விடு. நானே எல்லாவற் றையும் எடுத்துக் கொண்டு போய்த் தபாலில் சேர்த்துவிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/76&oldid=596756" இலிருந்து மீள்விக்கப்பட்டது