பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் 79 பேடுகளுள் இவ்வன்பிற் செப்பேடுகளே மிகப்பழமை வாய்ந்தவை. இனி, சுந்தரசோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று இவன் மனமுடைந்து இரண்டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்துவிட்டது. அஃது இவன் முதல் மகனும் பெரு வீரனுமாகிய ஆதித்த கரிகாலன் கி. பி. 969-ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டமையே யாம். சிதம்பரந் தாலூகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக்கணித்தாகவுள்ள உடையார்குடியில் காணப் படும் கல்வெட்டொன்று! அவ்வரச குமாரனைக் கொன்றவர் யாவர் என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது. அக்கோடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசு வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூ ரானான ரேவதாசக் கிராமவித்தன் என்போர். அந் நால் வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. அவர்களுள் இருவர், பஞ்சவன் பிரமாதி ராஜன், இருமுடி சோழ பிரமாதிராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அர சாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருந்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரச னான ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வ னாகிய உத்தமசோழன் என்பவன், தான் அரசு கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருத் தல்கூடும் என்பது சிலர் கருத்து' . அதனையாராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையாததேயாம். உத்தம சோழனுக்கு அக்கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்த கரிகாலன் தம்பியும் குடிகளால் 1. Ep. Ind., Vol. XXI, No. 27. 2. The Colas, இரண்டாம் பதிப்பு, பக்கங்கள் 157-158.