பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பிற்காலச் சோழர் சரித்திரம் உத்தரகைலாயம் என்று வழங்குகின்றது. அச்செயலால் உலோகமாதேவியும் தன் கணவனைப்போல் சிவபக்தி யுடையவளாகத் திகழ்ந்தனள் என்பது புலப்படுதல் காண்க. இராசராச சோழனுடைய மற்ற மனைவிமார்கள், சோழ மாதேவி , திரைலோக்கியமாதேவி , பஞ்சவன்மாதேவி' , அபிமானவல்லி , இலாடமாதேவி , பிருதிவிமாதேவில் , மீனவன் மாதேவி7 , வீரநாராயணி , வில்லவன்மாதேவி , வானவன்மாதேவி10 என்போர். அவர்களுள் வானவன் மாதேவிக்குத் திரிபுவனமாதேவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு. அவ்வரசியே இராசேந்திர சோழனைத் தன் மகனாகப் பெற்ற பெருமையுடையவள் என்பது உணரற்பாலது11. பஞ்சவன்மாதேவி என்பாள் திருச் சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவில் பழுவூரில் வாழ்ந்துகொண்டிருந்த சேரர்குலக் குறுநில மன்னனாகிய பழுவேட்டரையன் மகள் ஆவள். இராச தேவீஸ்வரம் உடைய மகாதேவர்க்கும் ஒலோகவிடங்க தேவருள்ளிட்ட திருமேனிகளுக்கும் செய்வித்த பொற் கொள்கை முதலிய உள்ள திருவாபரணங்களும் திருப்பரி கலங்களும் கல்லிலே வெட்டுவிக்க என்று,--S. I. I., Vol. V, No. 521 1. S. 1. 1., Vol. III, No. 42 and 46 2. Ibid, No: 48. 3. Ibid, Nos. 51 and 53, 4. Ibid, No. 44) 5. Ibid, pp. 467 and 472 6. Ibid, Nos. 80 and 82. 7. Ins. 301 of 1908. 8. S. I. I., Vol. V, No. 975. 9. Ibid. No. 981. 10. Ibid, No. 982. 11, Ibid, page 368.