பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 167 வடவேந்தரை வென்று கங்கை நீரைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டுவந்த அருஞ்செயல் பற்றி, நம் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழன் என்னும் சிறப்புப்பெயர் எய்தி னன் என்பதும் அக்கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. இராசேந்திரனது வடநாட்டுப் படையெடுப்பிற் கலந்து கொண்ட படைத்தலைவர்கள் பலராதல் வேண்டும். அவர்கள் இன்னார் இன்னார் என்பதை இப்பொழுதுள்ள கல்வெட்டுக் களையும் செப்பேடுகளையுங்கொண்டு அறிய முடியவில்லை. எனி னும் இவ் வேந்தனுடைய படைத்தலைவர்களுள் மிகச் சிறப் புற்று விளங்கிய விக்கிரம சோழச் சோழிய வரையனான இராச ராசன் என்பான் தலைமைச் சேனாபதியாகச் சென்றிருக்க வேண்டும் என்பது ஒருவாறு புலப்படுகின்றது. அன்றியும் இராசேந்திரனுடைய மூத்த மகனும் இளவரசுப் பட்டம் பெற்றவனுமாகிய முதல் இராசாதிராச சோழன் இப்போரில் படையுடன் சென்று வெற்றி தேடித் தந்திருத்தல் வேண்டும் என்பது, - "வங்கத்தை முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி செற்ற தனியாண்மைச் சேவகனும் 1 என்ற தொடரில் இவ்வேந்தனது போர்ச்செயலை ஒட்டக் கூத்தர் விரித்துரைத்திருத்தலால் நன்கு விளங்கும். அப்படையெடுப்பின் பயனாகத் தமிழர் நாகரிகம் வங்காள மாகாணத்தில் புகுந்தது என்று ஐயமின்றிக் கூறலாம். படையுடன் சென்ற தமிழ்நாட்டுத் தலைவர்களுள் ஒருவன் மேல் வங்காளத்தில் தங்கிவிட்டனன் என்றும் அவன் வழியில் வந்த சாமந்தசேனன் என்பவனே பிற்காலத்தில் வங்காளத்தில் ஆட்சிபுரிந்த சேன மரபினரின் முதல்வன் என்றும் திரு. R. D. பானர்ஜி என்னும் அறிஞர் கூறு கின்றனர் 2. மிதிலையை யாண்ட கருநாடரும் அவ்வாறு சென்றவர்களாக இருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சி --


1. விக்கிரம சோழனுலா, வரிகள் 36-38. 2. Palas of Bengal, pp. 73 and 99.