பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 முதல் இராசேந்திர சோழன் 2. கிருஷ்ணன் இராமனான மும்முடிச்சோழ பிரம மாராயன் : இவன் இராசராசசோழன் ஆணையின்படி தஞ்சைப் பெரிய கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுப் பித்தவன் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் இராசேந்திரன் ஆட்சியிலும் படைத்தலைவனாக இருந்துள் ளனன். 1 கி. பி. 1044-ல் ஒரு கல்வெட்டில் இவன் குறிப் பிடப்பட்டிருத்தலால் இவன் இராசேந்திரசோழன் ஆட்சிக் காலம் முழுமையும் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் இவ்வேந்தனது ஆட்சியில் இராசேந் திரசோழ பிரமமாராயன் என்ற பட்டம் பெற்றுப் புகழுடன் விளங்கினான். 2 3. மாராயன் அருண்மொழியான உத்தமசோழ பிரமமாராயன் : இவன், மேலே குறிப்பிடப்பெற்ற படைத்தலைவன் கிருஷ்ணன் இராமன் என்பவனுடைய புதல்வன். இவன், தன் தந்தையைப்போல் இராசேந் திரன் ஆட்சியில் சிறப்புடன் நிலவிய அரசியல் தலைவன் ; இராசேந்திரசோழன் ஆணையின்படி கங்கபாடி நாட்டி லுள்ள குவலாளபுரத்தில் கி. பி. 1033-ஆம் ஆண்டில் ஒரு பிடாரி கோயில் எடுப்பித்தவன் 3; அருண்மொழி என் பது இவனது இயற்பெயர் ; உத்தமசோழ மாராயன் என் பது இவனது அரசாங்க ஊழியத்தைப் பாராட்டி அரசன் அக்காலத்தில் வழங்கிய பட்டமாகும். பிரமமாராயன் என்பதனால் இவன் அந்தணர் குலத்தினன் என்று தெரி கிறது. 4. ஈராயிரவன் பல்லவயனான உத்தமசோழப் பல்ல வரையன்: இவன் சோழநாட்டில் பாம்புணிக் கூற்றத்தி லுள்ள அரசூரில் பிறந்தவன் ; இராசேந்திர சோழனுடைய 1. Ins. 217 of 1911. 2. Ep. Ind., Vol. XXII, No. 34. 3. Ep. Car., Vol. X, KL. No. 109 a.