பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பிற்காலச் சோழர் சரித்திரம் ராசேந்திரனும் ஒருவன் என்பது நன்கு வெளியாகின்றது. எனவே, இரண்டாம் இராசேந்திரன், இராசமகேந்திரன், வீரராசேந்திரன் ஆகிய மூவரும் முடக்காற்றில் நிகழ்ந்த போரை நேரில் நடத்தி வாகைசூடிய சோழ மன்னர்கள் ஆவர். அவர்களுள், இராசமகேந்திரன் என்பான், நம் இரா சேந்திரனால் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றிருந்த இவன் முதற் புதல்வன் என்று சொல்லப்படுகிறது. அவ்விராச மகேந்திரன் ஆகவமல்லனை முடக்காற்றில் முதுகாட்டி ஓடும்படி செய்த பெருவீரன் என்று அவன் கல்வெட்டுக்கள் உணர்த்தினும் அவனைப்பற்றிய வேறு செய்திகள் தெரிய வில்லை. ஆயினும், ‘ பனுவலுக்கு முதலாய வேத நான்கிற் பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழைய தங்கள் மனுவினுக்கு மும்மடி நான்மடியாஞ் சோழன் மதிக்குடைக்கீழ் அறந்தளிர்ப்ப வளர்த்தவாறும்' என்று கலிங்கத்துப் பரணியில் 2 குறிப்பிடப் பெற்றுள்ள மும்முடி சோழனே இராசமகேந்திரன் என்று கருதுவதற்கு இடமுளது. அன்றியும், ' அப்பழ நூல் பாடரவத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால் ஆடரவப் பாயல் அமைத்தோனும்' என்னும் விக்கிரமசோழன் உலாவடிகளால் அவன் அரங்க நாதரிடம் அன்புபூண்டு அப்பெருமானுக்குப் பொன்னாலும் மணியாலும் அரவணையொன்று அமைத்தனன் என்பது அறியப்படு கின்றது. அக் கோயிலில் இராசமகேந்திரன் திருவீதி என்னும் பிராகாரம் ஒன்றும் அவன் எடுப்பித்தான் என்று 1. The Colas, Vol. I, pp. 316 and 317. 2. கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம். பா. 28. விக்கிரமசோழன் உலா, வரிகள் 40, 42.