பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் இராசேந்திர சோழன் 227 ராசேந்திர ஜயமுரி நாடாழ்வான் என்று கருவூர்க் கல் வெட்டில் குறிக்கப்பெற்ற தலைவன் இவனேயாவன். 3. சேனாபதி அரையன் கடக்கங்கொண்ட சோழன் ராசராச அணிமுரி நாடாழ்வான் :- இவன் இராசேந்திர சோழனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன். இவனு டைய ஊர் திருவையாறு என்று தெரிகிறது. இவன் திருமழபாடிக் கோயிலில் பொன்னார் மேனியர் திருவுரு வம் ஒன்று செம்பினால் எழுந்தருளுவித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக நிலம் அளித்துள்ளான். அன் றியும், அதற்குப் பல அணிகலன்களும் கொடுத்துள்ளனன். ஆகவே, இவன் சிவபெருமானிடத்தும் சைவசமய குரவ ரிடத்தும் பேரன்புடையவன் என்பது தெள்ளிது. 4. பஞ்சநதிவாணனாகிய மதுராந்தகத் தமிழ்ப் பேர ரையன் :- இவன் இராசேந்திர சோழனுடைய தண்ட நாயகர்கட்குத் தலைவன் ; மதுராந்தகத் தமிழ்ப் பேரரை யன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் மைசூர் இராச் சியத்தில் கங்க நாட்டுக் கல்வெட்டொன்றில் 3 குறிப்பிடப் பெற்றிருத்தலால் அந்நாட்டை யாண்டுவந்த சோணாட்டுத் தலைவன் ஆதல்வேண்டும். 5. வேளாளக்கூத்தன் ஆகிய செம்பியன் மூவேந்த வேளான் :- இவன் இராசேந்திரனுடைய அரசியல் அதி காரிகளுள் ஒருவன் : அரசனால் வழங்கப்பெற்ற செம்பி யன் மூவேந்த வேளான் என்னும் பட்டம் உடையவன். அரசனது உத்தரவின்படி - திருவாரூர்க் கோயிலில் கர்ப்பக் கிரகம், அர்த்தமண்டபம் முதலானவற்றைப் பொன் வேய்ந்து புகழ் எய்தியவன் 4. 1. S. I. I., Vol. III, No. 21. 2. Ibid, Vol. V, No. 644. 3. Ep. Car., Vol. X, KL. 107. 4. Ins. 669 and 675 of 1919,