பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பிற்காலச் சோழர் சரித்திரம் ஊர்களிலும் காணப்படுகின்றன. அன்றியும், இவன் தன் புதல்வன் கங்கைகொண்ட சோழன் என்பவனைச் சோழ பாண்டியன் என்னும் பட்டத்துடன் கி. பி. 1064-ல் பாண்டி நாட்டில் அரசப் பிரதிநிதியாக அமர்த்தினான் என்று திருவெண்காட்டுக் கல்வெட்டு ஒன்று உணர்த்து கின்றது. இந்நிலையில் இவன் பாண்டியனோடு போர் தொடுத்தமைக்குக் காரணம் தெரியவில்லை. அரசப் பிரதிநிதியாயிருந்த தன் புதல்வனுக்கு அடங்காமல் உள் நாட்டில் குழப்பமும் கலகமும் உண்டு பண்ணிக் கொண் டிருந்தமை பற்றி இவன் பாண்டி நாட்டிற்குச் சென்று அவ் வீரகேசரியைப் போரில் கொன்றிருத்தல் கூடும்.3 கி. பி. 1066-ஆம் ஆண்டில் இவன் சேர நாட்டிலுள்ள உதகை மீது படையெடுத்துச் சென்றபோது சேரமன்னர்கள் எதிர்த்துப் போர்புரியும் ஆற்றலின்றிப் பெரிதும் அஞ்சி ஓடி யொளிந்தனர். என்றும், பின்னர் அவர்கள் கப்பமாக அளித்த யானைகளையும் பிறபொருள்களையும் பெற்றுக் கொண்டு திரும்பினான் என்றும் செங்கற்பட்டு ஜில்லா மணிமங்கலத்திலுள்ள ஒரு கல்வெட்டும், திருமுக்கூடலி லுள்ள ஒரு கல்வெட்டும் உணர்த்துகின்றன. அவ்வாறு அச்சமுற்று வீரராசேந்திரனுக்குத் திறை செலுத்திய சேர மன்னர்கள் யாவர் என்பது இப்போது தெரியவில்லை. அன்னோர் சோழர்க்கு அடங்கிய குறு நில மன்னரா யிருந்து பின்னர் முரண்பட்டவராதல் வேண்டும். அது பற்றியே வீரராசேந்திரன் அவர்கள் நாட்டின்மேல் படை யெடுத்துச் செல்லவேண்டியது இன்றியமையாததாயிற்று எனலாம். இனி, இவ்வேந்தன். ஆகவமல்லனோடு நான்காம் முறை நடத்திய போர் ஆராயற்பாலதாகும். அஃது எவ்விடத்தில் 1. Ins. 401 of 1930. 2. S. 1. 1., Vol.. V, No. 976. 3. 1bid, Vol. 111, No. 30. 4. Ep. Ind., Vol. XXI, No. 38: