பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரராசேந்திர சோழன் 243 பெற்றான்.! அச்சமயத்தில் வீரராசேந்திரன் படையெடுத் துச் சென்று அனந்தப்பூர் ஜில்லாவிலுள்ள குத்தி என் னும் நகரை முற்றுகையிட்டுச் சோமேசுவரன் முன் நிற்க முடியாமல் விரைவில் திரும்பிவிட்டான் என்று அச் சளுக் கிய மன்னன் கல்வெட்டொன்று கூறுகின்றது. ஆனால் வீரராசேந்திரன் ' சோமேசுவரன் கட்டிய கண்டிகை அவிழ்ப்பதன் முன்னம்' அவன் நாட்டின்மேல் படையெ டுத்துச் சென்று, பல்லாரி ஜில்லாவிலுள்ள கம்பிலி நகரை எரித்து, குத்தியை முற்றுகையிட்டு, இடைதுறை நாட்டிலுள்ள கரடிக்கல்லில் வெற்றித்தூண் ஒன்று நிறு வினான் என்று அவன் கல்வெட்டுக்கள் உணர்த்துகின் றன. அன்றியும், இவன் அச் சோமேசுவரனைக் கன்னட தேயத்தைக் கைவிட்டோடும்படி செய்து, இரட்டபாடி ஏழரை இலக்கத்தை வென்று, தன்னையடைந்து வணங்கி உதவிவேண்டிய சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு அதனை வழங்கி முடிசூட்டினான் என்று அக்கல்வெட்டுக்கள் கூறு கின்றன. 3 விக்கிரமாங்கதேவ சரிதத்தில் அச்செய்திகள் விக்கிரமாதித்தனைப் புகழ்ந்துகூறும் முறையில் வேறு பட்டுக் காணப்படுகின்றன. இரண்டாம் சோமேசுவரன் முடிசூடியபிறகு தீயநெறியிற் சென்று பல்வகையாலும் குந்தள நாட்டு மக்களை வருத்தவே, அதுபற்றிக் குடிகட்கு அவன்பால் வெறுப்பு ஏற்பட்டது என்றும், அதனையு ணர்ந்த இளவலாகிய விக்கிரமாதித்தன் அவனை நன்னெ றிக்குத் திருப்புவதற்குப் பெரிதும் முயன்று, பயன்படா மையால் மனம் வேறுபட்டுத் தன் தம்பி சயசிம்மனோடு கல்யாணபுரத்தைவிட்டுப் போய்விட்டான் என்றும், அங்ங னம் போ தங்கால் சோமேசுவரன் படையையும் புறங் காட்டி ஓடச்செய்து, வனவாசியில் துங்கபத்திரைக் கரையில் சிலகாலம் வரையில் தங்கியிருந்தான் என்றும், பிறகு, 1. கி. பி. 1068- ஆம் ஆண்டு மார்ச் 30-ல் ஆகவமல்லன் இறந் தான். பின்னர், ஏப்ரல் 11-ல் இரண்டாம் சோமேசுவரன் முடிசூட்டப்பட்டான், (Ep. Ind., Vol. XXV, p. 249.) 2. Ep. Car., Vol. VII, SK, No 136, 3. S. I. 1., Vol. III, Nos. 83 & 84.