பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பிற்காலச் சோழர் சரித்திரம் முதல் இராசராசசோழனுக்கு முன் அரசாண்ட சோழ மன்னர்கள் தம் இயற் பெயர்களோடு தம் வீரச் செயல் களையுணர்த்தும் அடைமொழிகள் அமைந்த பட்டங்களை யும் சேர்த்துக் கல் வெட்டுக்கள் வெளியிட்டுள்ளனர். அவ் வுண்மையை, விசயாலய சோழன் ' தஞ்சைகொண்ட கோப்பரகேசரிவர்மன் ' எனவும், முதல் ஆதித்த சோழன் * தொண்டைநாடு பரவின சோழன் பல்யானைக் கோக் கண்டனான ராசகேசரிமர்வன் ' எனவும், முதற்பராந்தக சோழன் ' மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரி வர்மன் ' எனவும், இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் ' மதுரை கொண்ட கோ இராசகேசரிவர்மன் ' எனவும், ' பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் ' என வும், தம்தம் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருத்தலால் நன்கறிந்து கொள்ளலாம். முதல் இராசராச சோழனும் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல் வெட்டுக்களிலே மெய்க்கீர்த்தியின்றிக் • காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தருளிய கோ இராசகேசரிவர்மன்' என்றுதான் தன்னைக் குறித்துள்ளனன். எனவே அவனது எட்டாம் ஆட்சியாண்டாகிய கி. பி. 993- தான் அவன் தன் கல் வெட்டுக்களில் மெய்க்கீர்த்தியை முதலில் வரையத் தொடங்கிய காலமாகும். அவ்வாண்டிற்கு முன்னர் அவன் நிகழ்த்திய போர்ச்செயல்கள் எல்லாவற்றையும் நிரலே அமைத்து அம்மெய்க்கீர்த்தி எழுதப்பெற்றிருத் தல் அறியத்தக்கது. ஆண்டு தோறும் நிகழும் அரச னுடைய வீரச் செயல்களும் புகழுக்குரிய பிற செயல்களும் மெய்க்கீர்த்தியில் அவ்வப்போது தவறாமல் சேர்க்கப் பெற்று வந்தமை உணரற்பாலதொன்றாம். ஆகவே அரச னது ஆட்சியாண்டுகள் மிகுந்து செல்லச்செல்ல, மெய்க் கீர்த்தியும் பெருகிக்கொண்டே போகும் என்பது ஒருதலை. அதனால், ஒரு வேந்தன் ஆட்சியில் எவ்வெவ்வாண்டில் எவ்வெவை நிகழ்ந்தன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அன்றியும், ஒவ்வொரு மன்னனுடைய மெய்க்கீர்த்தியும் வெவ்வேறு மங்கல மொழித்தொடரால் தொடங்கப் பெற்றிருத்தலால் அதில் முதலில் காணப்