பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் நாகலை யென்னுந் தோகையஞ் சாயலை முகத்தொடு மூக்குவே றாக்கிப் பகைத்தெதிர் மூன்றாம் விசையினு மேன்றெதிர் பொருது பரிபவந் தீர்வனெனக் கருதிப் பொருபுனற் கூடல் சங்கமத் தாகவ மல்லன் மக்களாகிய விக்கலன் சிங்கண னென்றிவர் தம்மொடு மெண்ணில்சா மந்தரை வென் றடு தூசிமுனை விட்டுத் தன்றுணை மன்னருந் தானும் பின்னடுத் திருந்து வடகட லென்ன வகுத்தவத் தானையைக் கடகளி றொன்றாற் கலக்கி யடல்பரிக் கோசலைச் சிங்கனைக் கொடிபட முன்னர்த் தூசிவெங் களிற்றொடுந் துணித்துக் கேசவ தண்ட நாயகன் தார்க்கேத் தரையன் திண்டிறல் மாரயன் சினப்போத் தரைய னிரேச்சய னீகல் செய்பொற் கோதைமூ வத்தியென் ரார்த்தடு துப்பி ல்நேகசா மந்தரைச் சின்ன பின்னஞ் செய்து பின்னை முதலி யான மதுவண னோட விரித்த தலையோடு விக்கல னோடச் செருத்தொழி லழிந்து சிங்கண னோட அண்ணல் முதலிய அனை வரு மமர்பொரப் பண்ணிய பகடிழிந் தோட நண்ணிய ஆகவ மல்லனுமவர்க்கு முன் னோட வேகவெங் களிற்றினை விலக்கி வாகை கொண் டங்கவர் தாரமு மவர்குல தனமுஞ் சங்குந் தொங்கலுந் தாரையும் பேரியும் வெண்சா மரையு மேக டம்பமும் சூகரக் கொடியும் மகரதோரணமும் ஒட்டக நிரையு முலோகா சனமும் புட்பகப் பிடியும் பொருகளிற் றீட்டமும் பாய்பரித் தொகையொடும் பறித்துச் சேயொளி வீரசிங்காதனம் பார்தொழ வேறி எழிறர வுலக முழுதுடை யாளொடும் விசையபணி மகுட மேய்ந்து எழில் கொள் தத்துமாப் புரவிப் பொத்தப்பி வேந்தனை வாரணை வன்கழற் கேரளன் றன்னைத் L