பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோழர் நிலை

13

கர் நூல். கடப்பை ஜில்லாக்களில் கிடைத்துள்ள தெலுங்கச் சோழர் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் அவர்கள் காவிரியாற்றிற்கு இருமருங்கும் கரைகண்டசோழன் கரி காலன் வழியினர் என்று குறிக்கப் பெற்றிருப்பது 1. சோழ மன்னர்கள் ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் தமக்குரிய சோழ நாட்டிலேயே இருந்தனர் என்பதற்குத் - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய சமய குரவரது அருட்பாடல்களும் நந்திக்கலம்பகமும் வேலூர்ப் பாளையச் செப்பேடுகளும் சின்னமனூர்ச் செப்பேடுகளும் பெரிய புராணமும் தக்க சான்றுகளாக உள்ளன என்பது - முன்னரே விளக்கப்பட்டது. ஆகவே, சோழர் குறு நில மன்னராயிருந்த காலத்தில் வேறு நாடு புகுந்து வதிந்தனர் என்ற கொள்கை வலியுடைத்தாகாமை உணர்க.



1. கி. பி. ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் கடப்பை கர் நூல் ஜில்லாக்களிலிருந்த தெலுங்கச் சோழர், சோழன் கரி காலன் வழியினருள் வேறு ஒரு கிளையினர் ஆவர். அவர்கள் எப்போது அங்குப்போய்த் தங்கினர் என்பது புலப்படவில்லை. அன்னோர் தெலுங்கராகவே மாறிவிட் டனர். தமிழகத்திற்கும் அவர்கட்கும் சிறிதும் தொடர் பில்லை. ஆகவே, அன்னோர் வரலாறு ஈண்டு எழுதப் படவில்லை ,