பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பிற்காலச் சோழர் சரித்திரம் சித்தூர் ஜில்லாவில் திருக்காளத்திக்கு அண்மையிலுள்ள தொண்டைமான் பேராற்றூரில் கி. பி. 907-ஆம் ஆண்டில் ஆதித்தன் இறந்தனன் என்று தெரிகிறது. அவ்வூர் இக் காலத்தில் தொண்டைமானாடு என்று வழங்கப்படுகிறது. அங்கு, இவன் புதல்வனாகிய முதற் பராந்தக சோழன் தன் தந்தையை நினைவுகூர்தற் பொருட்டுப் பள்ளிப்படையாக 2 ஒரு கோயில் எடுப்பித்தான். அக்கோயிலுக்கு ஆதித்தேசு வரம் கோதண்ட ராமேசுவரம் என்னும் பெயர்கள் அந்நாளில் வழங்கி வந்தன என்பது அதிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகிறது' . ஆதித்தனுக்குக் கோதண்டராமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு உணர்த்துவது ஈண்டு அறியத்தக்கது . தன் தந்தையின் பள்ளிப்படையாகிய கோதண்டராமேசுவரத்தில் புரட்டாசித் திங்களில் ஏழு நாட்கள் திருவிழா நடத்துவதற்கும் மாவிரதி களுள்ளிட்ட அறுசமயத்தவசிகள் இருநூற்றுவர், அந்தணர் முந்நூற்றுவர், அன்பரான பல சமய ஐந்நூற்றுவர், ஆகிய ஆயிரவர்க்கும் அவ்விழா நாட்களில் நாள்தோறும் உணவளிப் பதற்கும் முதற் பொருளாக நூற்றைந்து கழஞ்சு பொன் பராந்தக சோழனால் கொடுக்கப்பட்டுள்ளது . 1. S. I. I., Vol. III, No. 142, தொண்டைமானாற்றூர்த் துஞ்சின உடையார்க்கு யாண்டு இருபத்தொன்றாவது..' 2. அரசனது சமாதிக்கோயில் பள்ளிப்படை என்று அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. 3. S. I. I., Vol. VIII, No. 529. 4. Travancore Archaeological Series, Vol. III, No. 34. 5. S. I. I., VIII, pp. 268 and 269.