பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பிற்காலச் சோழர் சரித்திரம் கோப்பரகேசரி வர்மன் ' என்று கூறுகின்றமையின் கி. பி. 910-ஆம் ஆண்டில் இவன் பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்துச் சென்று மதுரையைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. அந்நாளில் பாண்டி நாட் டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன் மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் என்போன் 1. பராந்தகன் நிகழ்த்திய போரில் அவன் தோல்வியுற்று இலங்கை வேந்தனாகிய ஐந்தாம் காசிபனைத் தனக்குத் துணைப்படை யுதவுமாறு வேண்டிக்கொண்டான். இலங்கை வேந்தனும் இராச சிம்மன் வேண்டுகோட்கிணங்கி, சக்க சேனாதிபதியின் தலைமையில் பெரும் படையொன்றைப் பாண்டி நாட்டிற் கனுப்பினான்? - அப் படைப்பெருக்கைக் கண்ட பாண்டி வேந்தன் களிகூர்ந்து, அதன் துணைகொண்டு நாவலந் தீவு முழுமையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவரமுடி யும் என்று கூறினான். பின்னர், பாண்டிப் படையை யும் ஈழப் படையையும் ஒருங்கு சேர்த்துக்கொண்டு இராசசிம்ம பாண்டியன் பராந்தகனோடு போர்புரியப் புறப் பட்டான். வெள்ளூர்4 என்ற இடத்தில் இரு வேந்தர்க் கும் பெரும் போர் நடைபெற்றது. அப்போரில், பராந்தகன் அளவற்ற வீரர்களையும் யானைகளையும் குதிரைகளையும் கொன்று குவித்து மீண்டும் மதுரைமா நகரைக் கைப்பற்றி னான். பாண்டிப்படையும் இலங்கையிலிருந்து வந்த துணைப் படையும் புறங்காட்டி ஓடின. இராசசிம்ம பாண்டியன் இம் முறையும் தோல்வி யெய்தினான். இச்செய்திகளுள் சில வற்றை இரண்டாம் பிருதிவிபதியின் உதயேந்திரச் செப் 1. S. I. I., Vol. II, No. 76. (Udayendram Plates, Verse 11) 2. The Colas, Vol. 1, p. 144. 3. Ibid, p. 144 (மகாவம்சக் குறிப்பு) 4. S. I. I., Vol. III, No. 99; Ins. 231 of 1926. 5. பராந்தக சோழனது ஆட்சியின் 16-ஆம் ஆண்டுக் கல் வெட்டு இவனை, ' மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று குறிப்பிடுகின்றது. இவன், வெள்ளூர்ப் போரில் ஈழநாட்டுப் படையையும் வென்று புறங்காட்டியோடச் செய்தமைபற்றி அவ்வாறு குறிப்பிட நேர்ந்தது போலும்.