பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலச் சோழர் சரித்திரம் மன்னர்களாகிய யுத்த மல்லனுக்கும் இரண்டாம் வீம னுக்கும் மனவேறுபாடு உண்டாகிப் பகைமூண்டது. கி. பி. 934-ல் இராஷ்டிரகூட வேந்தனாகிய நான்காம் கோவிந் தன் யுத்தமல்லனுக்கு உதவிபுரிய வேண்டி இராண்டாம் வீமனை எதிர்த்துப் போர்புரிந்து தோல்வி எய்தினான். 1 அப்போது கோவிந்தனுடைய சிறிய தந்தையின் மகனாகிய மூன்றாம் கிருஷ்ணதேவன் என்பவன், நாட்டில் அவ னுக்கு ஆதரவு சிறிதும் இல்லை என்பதை நன்குணர்ந்து, உள் நாட்டில் கலகமும் குழப்பமும் உண்டுபண்ணி, இராஷ்டிரகூடச் சிங்காதனத்தைக் கவர்ந்து தன் தந் தைக்கு முடி சூட்டினான் 2. எனவே, மூன்றாம் கிருஷ்ண தேவன் தந்தையும், மூன்றாம் இந்திரன் தம்பியுமாகிய மூன்றாம் அமோகவர்ஷன் என்பான் கி. பி. 935-ல் மானிய கேடமா நகரில் இராஷ்டிரகூட வேந்தனாய் வீற் றிருந்து அரசாளத் தொடங்கினான். தன் இராச்சியத்தை இழந்த கோவிந்தனும் தன் மனைவி வீரமாதேவியோடு தஞ்சை மாநகர்க்கு வந்து தன் மாதுலன் பராந்தக சோழன் பால் தங்கி யிருந்தான். அவன் கி. பி. 939 வரையில் சோழ நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பது சில கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. 3 மூன்றாம், அமோகவர்ஷன் கி. பி. 939-ஆம் ஆண்டின் இறுதியில் இறந்தபோது 4 இராச்சியத்தை இழந்து தஞ்சைமா நகரில் தங்கியிருந்த கோவிந்தன் தனக்குரிய இரட்ட மண்டலத்தை மீண்டுங் கைப்பற்றுவதற்கு அதுவே தக்க காலமென்று கருதித் தன் மாதுலன் துணைகொண்டு முயற்சி செய்தான். எனவே, பராந்தக சோழனது படை யும் இரட்ட மண்டலத்திற்குப் போருக்குப் புறப்பட்டது. அமோகவர்ஷன் மகனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவனுடைய 1. The Rashtrakutas & Their Times, page 107, Ep. Ind. Vol. XXVI, page 164. 2. The Rashtrakutas & Their Times, pp. 108 & 109. 3. Ins. 245 and 246 of 1921. 4. Ep. Ind., Vol. XXVI, page 164.