பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பராந்தக சோழன் 57 இவனுக்கு ஆற்றொணாத் துன்பத்தையும் பெருங் கவலையை யும் அளித்திருக்கும் என்பது திண்ணம். எனினும், தன் இராச்சியத்தில் ஆட்சி அமைதியாக நடைபெற வேண்டும் என்ற கருத்தினனாய், இவன் தன் இரண்டாம் புதல்வனாகிய கண்டராதித்த சோழனுக்கு, கி. பி. 950-ஆம் ஆண்டில் இளவரசுப் பட்டங்கட்டி அரசாங்க அலுவல்களைக் கவனித்து வருமாறு செய்தான். ஆகவே, இவன் நாட்டின் நலங்கருதித் தான் செய்தற்குரியதைத் தவறாமல் நிறைவேற்றியமை பெரிதும் பாராட்டற் பால தாம். பராந்தகன், சிறந்த சிவபத்திச் செல்வம் வாய்க்கப் பெற்றவனாதலின், தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து அதனை உண்மையிற் பொன்னம்பலமாக்கினான். இச் செய்தியை ஆனைமங்கலச் செப்பேடுகளிலும் திருவாலங் காட்டுச் செப்பேடுகளிலும் காணலாம்.. அன்றியும் இதனை, 'வெங்கோல் வேந்தன் தென்னாடும் ஈழமுங் கொண்டதிறற் செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்த அங்கோல் வளை யார் பாடியாடும் அணிதில்லையம்பலம்'3 என்று முதற் கண்டராதித்த சோழனும் 'கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங் காதலாற் பொன்வேய்ந்த காவலனும் ' 4 - என்று கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும் போற்றிப் புகழ்ந்திருத்தல் அறியற்பால தொன்றாம். இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் திருவிடைமருதூர் 5. 1. Ep. Ind., Vol. XXVI, page 84. 2. Ibid., Vol. XXII, No. 34, Verse 17, S. I. I., Vol. III, No. 205, Verse 53. 3. ஒன்பதாம் திருமுறை--கோயிற்பதிகம், பா. 8. 4. விக்கிரம சோழன் உலா--வரிகள் 31, 32. 5. S. I, I., Vol. III, No, 124; Ins. 258 of 1907.