பக்கம்:பிள்ளைக்கலி.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 6 I சொல்லத் திறமையில்லையா நமக்கு ?' திகைத்துப் போன பரிமேலழகர் நாற்காலியில் அப்படியே சாய்ந்துவிட்டார். பக்கத்து அறையில் கண்ணகி, உறங்கிக் கொண்டிருந்த தன் தாயை, 'அம்மா... அம்மா’ என்று தட்டியெழுப்பியது அவருக்குக் கேட்டது. தாயிடம் அவள் என்ன சொல்கிருள் என்பதைக் கவனித்தார். 'அம்மா, இருட்டு எப்படி வருதுன்னு அப்பாவைக் கேட் டேம்மா. அவருக்குச் சொல்லத் தெரியாம பூமி...... சூரியன்...... ருண்டை......தட்டைன்னு என்னென்னவோ சொல்ருரும்மா. அப்பா பெரிய பெரிய புஸ்தகங்களைப் படிச்சிருந்தும் இதுகூட அவருக்குச் சொல்லத் தெரியலையே. அவருக்கு ஏம்மா நாளைக்கு 'பெரிய அறிவாளி"ன்னு பட்டம் கொடுக்கப் போருங்க ?’’ தாயிடம் பொரிந்து தள்ளிள்ை கண்ணகி. பரிமேலழகர் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியதைப்போல் இருந்தது. 'அம்மா, நீ சொல்லும்மா - இராத்திரி எப்படி வருது ? ஏன் எப்பவும் பகலா இருக்கக்கூடாது?’ என்று கண்ணகி கேட்டுக் கொண்டிருந்தாள். 'நம்மாலேயே குழந்தைக்குப் புரியும்படி, அவள் நம்பும்படி விளக்கிச் சொல்ல முடியவில்லையே - அஞ்சுகம் எப்படி அவள் கேள்விகளைச் சமாளிப்பாள் ? என்று அவர்கள் உரையாடலை உன்னிப்பாகக் கவனித்தார், பரிமேலழகர். 'இருட்டு எப்படி வருதுன்னு நான் சொல்றேன். நான் கேக்கறதுக்கு நீ பதில் சொல்லறயா கண்ணகி ?” ம்...... கேளும்மா, சொல்றேன்' 'பகல் எப்படி வருது ? அதைச் சொல்லு முதலில்...... ?' " என்று கேட்டார்கள் அஞ்சுகம். 'வந்து. . . வந்து... பகல் ?...' கண்ணகி திணறிஞள். சற்றுப் பொறுத்து வந்து பகல் சூரியன் வர்றதால் வந்தது' என்ருள் : 'அது சரி, சூரியன் ஏன் வருகிறது ?" 'ம்... கிழக்கேயிருந்து வருது' 1 I