பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலியால் கட்டித் தொங்கவிடப்பட்ட விளக்கு, காற்றிலே அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தது. அதைத்தான் அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். வேகமாகக் காற்று அடிக்கும்போது அந்த விளக்கு அதிகதுரம் போய்வரும்; மெது வாகக் காற்று அடிக்கும்போது, குறைந்த தூரமே போய் வரும். அந்த விளக்கு ஒரு முறை இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத் திற்குப் போவதற்கு எவ்வளவு நேரமாகிறது. என்று அந்த மாணவன் கணக்கிட்டான். எப்படிக் கணக்கிட்டான், தெரியுமா? வைத்தியர்கள் நாடி பார்ப்பது போல், தன் இடது கையில் வலது கை விரலை வைத்து நாடித் துடிப்பின் மூலம் கணக்கிட்டான். அதிக துாரம் போய்வர எவ்வளவு நேரம் ஆகிறது, குறைந்ததுரம் போய்வரஎவ்வளவு நேரம் ஆகிறது என்று கணக்கெடுத்தான். இரண்டுக்கும் ஒரே கேரம்தான் ஆனது! 300 ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை அறியக் கடிகாரங்கள் இல்லை. மாதா கோயில் விளக்கு அசைந்ததைப் போலத்தானே கடி காரத்திலுள்ள பெண்டுலமும் அசைகிறது? அந்த மாணவன் கண்ட உண்மையை வைத் துத்தான் கடிகாரங்கள் அமைக்கப்பட்டன. அந்த மாணவனுடைய குடும்பமோ மிக வும் ஏழை. ஏழையாயிருந்தாலும், அவன் 20