உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூரை எழுப்பினர். தாகூர் கண்களைக் கசக்கிக் கொண்டு நாடகம் நடந்த இடத்திற்கு வந்தார். அப்போது எங்கு பார்த்தாலும் வர்ண விளக்குகள் எரிக் துகொண்டிருந்தன. அவ ருக்குக் கண்கள் கூசின. சுற்றிலும் பார்த்தார். பெரியவர்களும், சிறியவர்களுமாக அங்கே ஏராளமானவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். முன் வரிசையில் அண்ணன்களுடன் தாகூர் போய் உட்கார்ந்தார். அப்போது அவர் கையிலே ஒரு முடிச்சைக் கொடுத் தார்கள். அதில் ரூபாய்கள் இருந்தன. சபாஷ்' சொல்லும்போதெல்லாம் ஒவ்வொரு ரூபாயாக மேடையில் வீசவேண்டும் என்ருர்கள். அப் படியே தாகூர் வீசினர். அந்தக் காலத்தில் பணக்காரர்கள், அந்த மாதிரிதான் ரூபாய் களே மேடையிலே வீசுவார்கள். நடிகர்கள் அந்த ரூபாய்களை எடுத்துக் கொள்வார்கள். இது அவர்களுக்கு மேல்வரும்படி: சிறிய வயதிலே சிற்றப்பா எழுதிய காட கத்தைப் பார்த்த தாகூர், பிறகு தாமே பல நாடகங்களை எழுதினர். நாடகங்கள் மட் டுமா? கவிதைகள், கதைகள், கட்டுரைகள், எழுதினர். அவை மூலமாக உலகப் புகழ் பெற்ருர். அவரது கீதாஞ்சலி' என்ற கவிதை நூல் நோபல் பரிசு பெற்றதுதான் உங்களுக்குத் தெரியுமே அவர் எழுதிய தேசீய கீதத்தை நாம் பாடாத காள் உண்டா? 58