கடைசியில் அவன் முயற்சி வெற்றிபெற்றது. 1893ல் அவன் மோட்டார் வண்டியைக் கண்டு பிடித்தான். பிறகு, சொந்தமாக ஒரு மோட் டார்க் கம்பெனியைத் தொடங்கின்ை. ஆயிரக் கணக்கான மோட்டார்களைச் செய்தான். உல கம் எங்கும் அவன் மோட்டார்கள் சென்றன. நல்ல கிராக்கி ஏற்பட்டது. லட்சம் லட்சமாக அவன் சம்பாதித்தான். ஏழை உழவனின் மக ய்ைப் பிறந்த அவன், உலகிலேயே மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவன் ஆன்ை. மோட்டார் மன்னன்’ என்று உலகமே அவ னைப் புகழ்ந்தது, அவன் ஏற்படுத்திய மோட்டார்க் கம்பெனி யில் இப்போது 300 பிரிவுகள் இருக்கின் றன. அந்தக் கம்பெனிக்குச் சொந்தமாகப் பல ரப்பர்த் தோட்டங்கள் உண்டு. பருத்தித் தோட்டங்கள் உண்டு. இவை மட்டுமா ? இரும்புச் சுரங்கங்கள், கிலக்கரிச் சுரங்கங்கள், சாமான்களை ஏற்றிச் செல்லத் தனி ரயில் பாதைகள் எல்லாம் இருக்கின்றன ! அவன் கம்பெனியில் தயாரான மோட் டார் கார்கள் உலகப் புகழ் பெற்றன. போர்ட் மோட்டார்’ என்ற பெயரைக் கேள்விப்பட் டிருப்பீர்களே ஹென்றி போர்ட் என்ற அமெ ரிக்கச் சிறுவனின் விடாமுயற்சி வெற்றி பெற் றது என்பதையே அந்த மோட்டார் நமக்கு எடுத்துக் காட்டுகிறது: 66
பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/68
தோற்றம்